CSK மேட்சை பார்க்க ஆசைப்பட்ட சிறுவர்கள்.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை - லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டியை காண விரும்பிய 100 சிறுவர்களை சேப்பாக்கத்தில் மேட்ச் பார்க்க வைத்திருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர். இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாடியது. இதில் குஜராத் வெற்றி பெற்றது. இதனையடுத்து நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோவை எதிர்கொண்டது சென்னை. கிட்டத்தட்ட 4 வருடங்கள் கழித்து சென்னை சேப்பாக்கத்தில் CSK போட்டி நடைபெற்றதால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருந்தனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. ருத்துராஜ் கெய்க்வாட்  - டிவான் கான்வே ஜோடி அபாரமான துவக்கத்தை அளித்தது. பின்னர் வந்த மொயீன் அலி, தூபே தங்களுடைய அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தினர். இறுதியாக களத்திற்கு வந்த தோனி 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு ரசிகர்களை பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

Images are subject to © copyright to their respective owners.

இதன் பலனாக சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ரன்களை குவித்தது. இதனையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. அந்த அணியின் மேயர்ஸ் - ராகுல் ஜோடி அபாரமான துவக்கத்தை அளித்தாலும் பவர்பிளே-க்கு பிறகு ஆட்டத்தை சென்னை வசம் கொண்டுவந்தார் மொயீன் அலி. சீரான இடைவெளியில் அந்த அணி விக்கெட்டுகளை இழந்தது. இதன் காரணமாக 20 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை எடுத்தது. இதன்மூலம் நடப்பு ஐபிஎல் போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்ட மன்ற உறுப்பினரும் இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் 100 சிறுவர்களை சென்னை - லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டியை காண செய்திருக்கிறார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள ட்விட்டர் பதிவில்,"சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில், கிரிக்கெட் மீது ஆர்வமுள்ள சிறுவர்களுக்கு IPL போட்டிகளை நேரில் காணும் வாய்ப்பை ஏற்படுத்தித்தரும் முயற்சியாக, வட்டம் 62ஐ சேர்ந்த 100 பேரை சென்னை - லக்னோ இடையேயான போட்டிக்கு அழைத்துச்சென்றோம். CSK வெற்றியால் மகிழ்ந்த அவர்களுக்கு வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார். அதனுடன் மேட்சை காண சென்ற சிறுவர்களின் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

 

CSK, UDHAYANIDHI STALIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்