"'ஃபைனல்ஸ்'க்கு இந்தியா நிச்சயம் இப்டி தான் 'பிளான்' பண்ணி இருப்பாங்க.. ஆனா, அத மாத்துனா நல்லா இருக்கும்.." 'அறிவுரை' வழங்கிய பிரபல 'கோச்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில், ஜூன் மாதம் 18 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற்றுள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள இந்த போட்டியை, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர். இரு அணிகளும் டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரையில், அதிக பலத்துடன் திகழ்வதால், யார் வெற்றி பெறுவார்கள் என்பது பற்றியும், கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இங்கிலாந்து ஆடுகளங்கள், வேகப்பந்து வீச்சிற்கு அதிக சாதகமாக இருக்கும் என்ற நிலையில், இரு அணிகளிலும் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்களும் இடம்பெற்றுள்ளனர். அது மட்டுமில்லாமல், இந்த போட்டிக்கு முன்பாக, நியூசிலாந்து அணி, இங்கிலாந்து அணிக்கு எதிராக, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் ஆடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி, டிராவான நிலையில், இரண்டாவது போட்டி, இன்று ஆரம்பமாகி, நடைபெற்று வருகிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதால், இங்கிலாந்து சூழலுக்கு தங்களை தயார் செய்ய நியூசிலாந்து அணிக்கு வசதியாக இருக்கும் எனவும் பலர் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் (Mike Hesson), டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி பற்றி பேசியுள்ளார்.

'மூன்று டெஸ்ட் போட்டிகள், தொடர்ந்து ஆடுவது என்பது, நிச்சயம் நியூசிலாந்து அணிக்கு சிக்கல் தானே இல்லாமல், நிச்சயம் சாதகமாக அமையாது. அடுத்தடுத்து, சிறிய இடைவெளியில் டெஸ்ட் போட்டிகளை ஆடுவதால், அந்த அணியிலுள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக ஓவர்களை வீச வேண்டியுள்ளது. இதனால், அவர்களுக்கு பணிச் சுமை அதிகரிக்கும் என்றே நான் கருதுகிறேன்' என தெரிவித்தார்.

தொடர்ந்து இந்திய அணியின் ஓப்பனிங் பேட்டிங் பற்றிப் பேசிய மைக் ஹெசன், 'இந்திய அணி, ரோஹித்துடன், சுப்மன் கில்லைத் தான் தொடக்க வீரராக களமிறக்கும் என நான் நினைக்கிறேன். ஆனால், என்னைக் கேட்டால், கில்லுக்கு பதிலாக, மயங்க் அகர்வாலைத் (Mayank Agarwal) தான் களமிறக்க வேண்டும் என நான் கூறுவேன்.


ஏனென்றால், அவர் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை, நியூசிலாந்தில் வைத்தே சந்தித்துள்ளார். இது அவருக்கு சில அனுபவங்களை கொடுத்திருக்கும்' என மைக் ஹெசன் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்