‘95 நிமிஷம், 45 பந்து’.. ‘20 வருஷத்துக்கு பின்’ இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வித்தியாசமான சாதனை படைத்த வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அதிக நேரம் களத்தில் நின்று ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி வெஸ்ட் இண்டீஸ் வீரர் வித்தியாசமான சாதனை படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸிக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் 297 ரன்களுக்கு இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 189 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக சேஸ் 48 ரன்கள் எடுத்திருந்தார். இதனை அடுத்து கேப்டன் ஹோல்டரும், கம்மின்ஸும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் 3 -ம் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 222 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த இன்னிங்ஸில் 95 நிமிடங்கள் களத்தில் நின்ற வெஸ்ட் இண்டீஸ் வீரர் கம்மின்ஸ் 46 பந்துகளை சந்தித்தார். ஆனால் அவர் ஒரு ரன் கூட எடுக்காமல் ஜடேஜாவின் ஓவரில் டக் அவுட்டாகி வெளியேறினார். மைதானத்தில் அதிக நேரம் நின்று டக் அவுட்டாகி வெளியேறியது சாதனையாகி உள்ளது. இதற்கு முன்னர் 1999 -ம் ஆண்டு நியூஸிலாந்து வீரர் ஜெஃப் அலாட் 101 நிமிடங்கள் களத்தில் நின்று ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டானது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘தோனிய ரீப்ளேஸ் பண்ண இவர்தான் சரியான ப்ளேயர்’.. சேவாக் சொன்ன அந்த பிரபல வீரர்..?
- ‘அஸ்வின் விளையாடததுக்கு இதுதான் காரணம்’.. புது விளக்கம் கொடுத்த துணைக் கேப்டன்..!
- இந்திய அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளர்..! பிசிசிஐ அதிரடி அறிவிப்பு..!
- ‘இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி’.. திடீரென விலகிய ஆல்ரவுண்டர்..! காரணம் என்ன..?
- ‘சச்சினோட இந்த ஒரு சாதனையை மட்டும் கோலியால் முறியடிக்க முடியாது’.. ரகசியம் உடைத்த சேவாக்..!
- 'டெஸ்ட்ல நாங்க ஃபுல் ஃபார்ம்ல இருக்கோம்'.. 'இந்த 2 பேர நெனைச்சாதான் உதறுது'
- ‘இந்திய பெண்ணை மணமுடித்த பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்’.. வைரலாகும் போட்டோ..!
- ‘இவங்க ரெண்டு பேர்ல ஒருத்தருக்குதான் இடம்’.. மீண்டும் சிக்கலில் கேப்டன் கோலி..!
- ‘கிட்ட நெருங்கியாச்சு’... ‘தோனியின் சாதனையை சமன் செய்ய'... 'காத்திருக்கும் விராட் கோலி'!
- ‘பயிற்சி ஆட்டத்தில் விளையாடாத கோலி’.. ‘கேப்டன் ஆன ரஹானே’.. காரணம் என்ன..?