"என்னது? போட்டிகளுக்கு இடையே அணி மாறலாமா!!!"... 'உடனடியாக Team மாறக் காத்திருக்கும்'... '5 நட்சத்திர வீரர்கள் யார்? யார்?? எந்த அணிக்கு செல்ல வாய்ப்பு?!...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

ஐபிஎல் 13ஆவது சீசனில் தற்போது அனைத்து அணிகளும் 7 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், மீதமுள்ள 7 போட்டிகளில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒரு அணியில் இருந்து மற்றொரு அணிக்கு வீரர்களை இடமாற்றம் செய்யலாம் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த சீசனில், 2 போட்டிகளுக்கு மேல் விளையாடாத எந்த வீரரையும், ஒரு அணியில் இருந்து மற்றொரு அணிக்கு மாற்ற முடியும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி டெல்லி கேபிடல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வீரர்களை மாற்றிக்கொள்ள அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஒருபக்கம் டெல்லி கேபிடல்ஸ் அணியில் முதல் வரிசை பேட்ஸ்மேன்கள் பிரித்வி ஷா, ஷிகர் தவன், ஷ்ரேயஸ் ஐயர் போன்றவர்கள் சிறப்பாக விளையாடி வருவதால், அஜிங்கிய ரஹானே அந்த அணிக்காக இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். அதேபோல அந்த அணியில் அமித் மிஸ்ரா காயம் காரணமாகத் தொடரிலிருந்து வெளியேறியுள்ளதால் ஸ்பின்னர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பேட்ஸ்மேன்கள் பற்றாக்குறை உள்ள நிலையில், அணியில்  6 பௌலர்கள் உள்ளதால் இம்ரான் தஹிர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.

இந்நிலையில், பிசிசிஐ அறிவிப்பை தொடர்ந்து அந்த வாய்ப்பை பயன்படுத்தி, டெல்லி அணிக்கு இம்ரான் தஹிரும், சென்னை அணிக்கு அஜிங்கிய ரஹானேவும் இடம் மாற அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களுடன் இன்னும் 3 வீரர்கள் அணிமாற அதிக வாய்ப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இடம் மாறும் வீரர்கள் அடுத்த சீசனில் மீண்டும் பழைய அணிக்குத் திரும்பிவிடுவார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

லாக்கி பெர்குசன் (கொல்கத்தா அணி) :

நியூசிலாந்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவர் இன்னும் ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை. இதனால், பந்து வீச்சில் சொதப்பி வரும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு இவர் இடம் மாற அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

கிறிஸ் லின் (மும்பை இந்தியன்ஸ்) :

ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் லின், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  அந்த அணியின் முதல் வரிசை பேட்ஸ்மேன்கள் தற்போதுவரை எந்த சொதப்பலும் இல்லாமல் சிறப்பாகச் செயல்பட்டு வருவதால் கிறிஸ் லென்னுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தின்போது, கிறிஸ் லின்னை வாங்குவதற்குத் தீவிரமாக முயற்சி செய்ததால், இவர் கொல்கத்தா அணிக்கு இடம் மாற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கிறிஸ் கெய்ல் (பஞ்சாப் அணி) :

‘யுனிவர்ஷல் பாஸ்’ கிறிஸ் கெய்ல் இந்த சீசனில் பஞ்சாப் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. கே.எல். ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் துவக்க வீரர்களாகக் களம் கண்டு சிறப்பாக விளையாடி வருவதால் கெய்லுக்கு வாய்ப்புகள் வழங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. மற்ற அணிகள் இவரைக் கேட்கும் பட்சத்தில் பஞ்சாப் அணி விட்டுக்கொடுக்கும் எனக் கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்