"ஒரு 'மேட்ச்' கூட முடியல, அதுக்குள்ளயா??..." பரபரப்பை ஏற்படுத்திய 'வாகனின்' 'ட்வீட்'!.. கடுப்பான 'இந்திய' ரசிகர்கள்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையேயான முதல் ஒரு நாள் போட்டி, தற்போது புனே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சைத் தேர்வு செய்த நிலையில், அதன்படி, இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இதனிடையே, போட்டி ஆரம்பித்து ஒரு அணியின் பேட்டிங் முடிவதற்குள், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், இந்த போட்டி குறித்து, நக்கலாக ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

முன்னதாக, இந்த போட்டியின் முதல் 11 ஓவர்கள் முடிவடைய ஒரு மணி நேரம் ஆகி விட்டது. இதனைக் குறிப்பிட்ட வாகன், 'ஒரு மணி நேரத்தில் 11 ஓவர்கள். அதுவும் ஒரு நாள் போட்டியில். இத்துடன் நான் ஒரு முடிவு எடுத்து விட்டேன். எனக்கு வயதாகவில்லை. இனிமேல், கிரிக்கெட் போட்டி தான் வேகமாக்கப்பட வேண்டும்' என ஒரு மணி நேரத்தில் ஓவர்கள் குறைவாக வீசப்பட்டதை விமர்சனம் செய்தார்.
 

 

முன்னதாக, ஐந்தாவது ஓவரின் போது, மார்க் வுட் வீசிய பந்தால், ரோஹித் ஷர்மாவின் முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக, வலியால் ரோஹித் ஷர்மா துடித்ததையடுத்து, அவர் காயத்தில் இருந்து மீண்டு வர, ஐந்து நிமிடங்களுக்கு மேலானது. இதனால், போட்டியும் சிறிது நேரம் தடைபட்டது. அதே போல, மூன்றாவது ஓவரின் போது, தவான் அடித்து பவுண்டரிக்கு சென்ற பந்தில் ஓட்டை விழுந்தது.

இதனால், 16 பந்துகளிலேயே புதிய பால் கொண்டு வரப்பட்டதால், அந்த சமயத்திலும் சிறிது நேரம் போட்டி தாமதமானது. பொதுவாக, பந்து வீச்சு தாமதமாவது என்பது, பந்து வீச்சு அணியினரின் தவறால் நிகழ்வது தான். ஆனால், இங்கு இந்திய வீரர் ரோஹித் ஷர்மா மூலம் தான் போட்டி மெதுவாக நடந்தது என்பதைத் தான் வாகன் கிண்டலாக குறிப்பிடுகிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அதே போல, பந்து வீச்சு மெதுவாக இருந்தால், இங்கிலாந்து அணிக்கு நீங்கள் ஃபீல்டிங் பயிற்சி கொடுங்கள் என்றும் ரசிகர்கள், வாகனின் கருத்தை விமர்சனம் செய்து வருகின்றனர்.





 

 



 


டெஸ்ட் தொடரில், இந்திய பிட்ச் தரமற்று இருந்ததாக விமர்சனம் செய்த வாகன், டி 20 தொடரின் போது, இந்திய அணியை விட, மும்பை இந்தியன்ஸ் அணி சிறந்த டி 20 அணி என்று கிண்டல் செய்திருந்தார்.

அதே போல, தற்போதும் முதல் ஒரு நாள் போட்டி முடிவடைவதற்குள், கிண்டலும், விமர்சனமும் வாகன் செய்யத் தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்