"அட, சும்மா சும்மா 'இந்தியா' டீம் பத்தி ஏதாச்சும் சொல்றாரே.." மீண்டும் கிண்டலடித்த 'வாகன்'.. "ஓகோ, இந்த தடவ இதான் விஷயமா?!"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையே, இறுதியாக நடைபெற்ற ஒரு நாள் தொடரை, இந்திய அணி கைப்பற்றி அசத்தியிருந்தது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளின் முடிவில், இரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி கண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, நடைபெற்ற மூன்றாவது போட்டியில், இந்திய அணி இங்கிலாந்திற்கு 330 ரன்களை இலக்காக நிர்ணயித்திருந்தது.

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், இளம் வீரர் சாம் குர்ரான் (Sam Curran), தனியாளாக நின்று இந்திய அணிக்கு ஆட்டம் காட்டினார். இதனால், போட்டியின் இறுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டது. இறுதியில், 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று தொடரை சொந்தமாக்கியது.

முன்னதாக, இந்த போட்டியில் இந்திய அணி ஃபீல்டிங் செய்த போது, நல்ல கேட்ச் வாய்ப்புகளை எல்லாம் தவற விட்டனர். இறுதி சமயத்தில், சாம் குர்ரானின் கேட்ச் ஒன்றையும் இந்திய அணி கோட்டை விட்டிருந்தது. இதனால், இந்திய அணியின் ஃபீல்டிங் மீது அதிகம் விமர்சனம் வைக்கப்பட்டிருந்தது. மூன்றாவது ஒரு நாள் போட்டிக்கு பின்னர் பேசிய இந்திய கேப்டன் கோலி (Kohli) கூட, இந்திய அணியின் ஃபீல்டிங் பற்றி சற்று அதிருப்தி அடைந்திருந்தார்.

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் (Michael Vaughan), இந்திய அணியின் ஃபீல்டிங்கை கிண்டல் செய்து ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில், ' எனது ஃபீல்டிங் அகாடமி, இந்த வாரம் மீண்டும் இந்திய வீரர்களுக்காக, திறக்கப்படுவதை எண்ணி அஞ்சுகிறேன்' என விமர்சனம் செய்துள்ளார்.

 

முன்னதாக, டெஸ்ட் மற்றும் டி 20 போட்டிகளில், இந்திய அணியின் ஃபீல்டிங் மோசமாக அமைந்த போது, 'தன்னுடைய ஃபீல்டிங் அகாடமியில் இந்திய வீரர்கள் சேர்ந்து கொள்ளுங்கள்' என இந்திய வீரர்களை அழைப்பது போல வாகன் கிண்டலடித்து ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்