"ஏன் அவருக்கு 'சான்ஸ்' கொடுக்கல.. நீங்க என்ன தான் நெனச்சிட்டு இருக்கீங்க??.." 'ஐபிஎல்' அணியின் முடிவால் கடுப்பான 'வாகன்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

14 ஆவது ஐபிஎல் சீசன் மிகவும் சிறப்பாக ஆரம்பித்து நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் மாற்றம் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதின.

இந்த போட்டியில், 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி திரில் வெற்றி பெற்றது. 222 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியில், சஞ்சு சாம்சன் மட்டும் நிலைத்து நின்று சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் கடைசி வரை, களத்தில் இருந்த போதும், வெற்றியை நெருங்கி வர மட்டுமே ராஜஸ்தான் அணியால் முடிந்தது.

இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீது சில கேள்விகளை எழுப்பி, இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் (Michael Vaughan), சில ட்வீட்களை செய்துள்ளார். முதலில், ராஜஸ்தான் அணி ஃபீல்டிங் செய்த போது, இங்கிலாந்து அணி வீரர் ஜோஸ் பட்லர் (Jos Butler) ஏன் கீப்பிங் நிற்கவில்லை என கேள்வி எழுப்பி ட்வீட் செய்திருந்தார்.


தனது அனுபவத்தின் காரணமாக, ஸ்டம்ப்களுக்கு பின்னால், சிறந்த வீரராக விளங்கும் பட்லரை கீப்பிங் செய்ய அனுமதிக்காதது ஏன் என ராஜஸ்தான் அணியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
 


 

பொதுவாக, சர்வதேச போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கும் பட்லர், நேற்றைய போட்டியில் நான்காவது வீரராக களமிறங்கினார். அவருக்கு பதிலாக தொடக்க வீரர்களாக வந்த ஸ்டோக்ஸ் மற்றும் வோஹ்ரா ஆகியோர் பேட்டிங்கில் சொதப்பினர்.



இதனை பற்றியும் ட்வீட் செய்த வாகன், 'இப்போது பட்லர் ஓப்பனிங் இறங்கவில்லை. நீங்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?' என ராஜஸ்தான் அணி மீது மீண்டும் ஒரு கேள்வியை முன் வைத்தார்.

 

 

ராஜஸ்தான் அணியை விமர்சனம் செய்து ட்வீட் செய்த வாகன், ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனையும் பாராட்ட மறக்கவில்லை. 'ஐபிஎல் தொடரின் மிகச் சிறந்த இன்னிங்ஸ்களில் இதுவும் ஒன்று. உலகத்தில் உள்ள எந்த டி 20 தொடராலும், ஐபிஎல் போட்டிகளை போன்ற விறுவிறுப்பைத் தர முடியாது' என சஞ்சு சாம்சன் மற்றும் ஐபிஎல் தொடரை பாராட்டியும் வாகன் ட்வீட் செய்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்