" 'இது' கூட அவருக்கு தெரியல"... "ரொம்ப மட்டமான கேப்டன்சி"!.. கோலியை வறுத்தெடுத்த முன்னாள் வீரர்!.. அப்படி என்ன தவறு செய்தார் கோலி?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒரு நாள் போட்டியில் இந்தியா தோல்வி அடைய முழுமையான காரணம் கேப்டன் கோலி தான் என்று முன்னாள் வீரர் காட்டமாக விமர்சித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில், 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு, பாரிஸ்டோவும், ஜேசன் ராயும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.
போட்டியின் முதல் சில ஓவர்களில் மெதுவாக விளையாடிய இந்த ஜோடி ஓவர்கள் செல்ல செல்ல தங்களின் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மளமளவென ரன் குவித்தது. நீண்ட நேரம் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு தொல்லை கொடுத்த இந்த ஜோடியை ரோஹித் சர்மா, தனது துல்லியமான த்ரோ மூலம் ஜேசன் ராயை (55) ரன் அவுட்டாக்கி பிரித்தார்.
ராய் விக்கெட்டை இழந்த பிறகு கூட்டணி சேர்ந்த பாரிஸ்டோ – பென் ஸ்டோக்ஸ் ஜோடி போட்டியை இந்திய அணியின் கையில் இருந்து மொத்தமாக பறித்தது. அதிரடியாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 99 ரன்கள் எடுத்த போது புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து, சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
பாரிஸ்டோ 112 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த பட்லர் டக் அவுட்டானதும், டேவிட் மாலன் –லிவிங்ஸ்டன் கூட்டணி இந்திய அணியின் பந்துவீச்சை ஈசியாக எதிர்கொண்டு ரன் குவித்ததன் மூலம் 43.3 ஓவரிலேயே இமாலய இலக்கை அசால்டாக எட்டிய இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியும் பெற்றது.
இந்த மோசமான தோல்விக்கு இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் தான் காரணம் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், இதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி எந்த நேரத்தில், எந்த பந்துவீச்சாளர்களுக்கு பந்துவீச கொடுக்க வேண்டும் என்பது தெரியாததால் தான் இந்திய அணி தோல்வியைத் தழுவியதாக கிரிக்கெட் வல்லுனர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இதுபற்றி பேசியுள்ள இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், "இந்தியா தனது சிறந்த பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். இந்திய அணியின் கேப்டன்ஷிப் மிகவும் மோசமாக உள்ளது என்று கேப்டன் கோலியை கடுமையாக விமர்சித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பாண்டியாவுக்கு ஏன் பவுலிங் கொடுக்கல'?.. கோலியை கேள்விகளால் துளைத்தெடுத்த விமர்சகர்கள்!.. கடைசியா சீக்ரெட் ப்ளானை உடைச்சுட்டாரு!.. இப்ப சந்தோசமா?
- 'இந்த trick-அ மிஸ் பண்ணிட்டீங்களே கேப்டன்'!.. பதில் சொல்லுங்க!.. ஒரு வேளை இந்தியா ஜெயிச்சிருக்குமோ?.. கோட்டை விட்டாரா கோலி?
- 'நீ உள்ள... நான் வெளிய'... 'டிரஸ்ஸிங் ரூம்ல வச்சு போட்ட ஸ்கெட்ச்'!.. சீக்ரெட்டை உடைத்த பென் ஸ்டோக்ஸ்!.. 'டார்கெட் பண்ணி தூக்கிட்டாங்களே'!!
- 'என்னங்க சார் உங்க சட்டம்'!?.. அம்பயர் செய்த தவறால்... ரன்களை இழந்த ரிஷப் பண்ட்!.. 'ஏ.. கரும்பேத்து மாரியாத்தா... உனக்கு கண்ணு இல்லையாடி'!
- 'பாஸ், நீங்க என்ன கர்ணன் பரம்பரையா?'... 'செம கடுப்பான ரசிகர்கள்'... மோசமான சாதனையை சொந்தமாக்கிய இந்திய வீரர்!
- 'நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு'!.. சாஃப்ட் சிக்னலில் 'இது' தான் பிரச்சனை!.. அம்பயர்ஸ் அட்ராசிட்டிஸ்க்கு விரைவில் முற்றுப்புள்ளி!.. ஐசிசி-யிடம் போட்டு கொடுத்த பிசிசிஐ!
- "என்னங்க இது??.. ஒவ்வோரு மேட்சும் இப்டி பண்ணிட்டு இருக்கீங்க??.." மீண்டும் சர்ச்சையான 'நடுவர்' முடிவு.. "கூடவே இந்தியா டீம்'க்கு இன்னொரு தலைவலி வேற!!"
- 'கேட்கல... சத்தமா... இன்னும் சத்தமா'!.. 'இந்த ஆட்டம் போதுமா... இன்னும் கொஞ்சம் வேணுமா'!?.. ரவுண்டு கட்டி விளாசிய கேஎல் ராகுல்!.. பின்னணி 'இது' தான்!
- VIDEO: ‘விட்டா அடிச்சிருவாரு போல’!.. கடும் கோபமாக ஓடி வந்த ஹர்திக்.. போட்டியை பரபரப்பாக்கிய சம்பவம்..!
- ‘இதை எதிர்பார்க்கவே இல்ல’!.. டாஸ் போட்ட பின் கோலி சொன்ன பதில்.. கொதித்த நெட்டிசன்கள்..!