"'இந்தியா' டீம் என்ன வேணாலும் பண்ணும்... அத தட்டிக் கேக்காம, வாய மூடிட்டு இருப்பீங்க'ல்ல..." கடுப்பான 'மைக்கேல் வாகன்'!... யார சொல்றாரு??...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி அபார வெற்றி பெற்றிருந்தது.

இரண்டு நாளுக்குள் முடிவடைந்த இந்த டெஸ்ட் போட்டியில், சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தனர். இந்த வெற்றியின் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடும் வாய்ப்பை இந்திய அணி தக்க வைத்துக் கொண்டது. அதே வேளையில், மறுபக்கம் இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை இழந்து விட்டது.

இந்நிலையில், அகமதாபாத் மைதானத்தின் பிட்ச், இந்திய வீரர்களுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருந்ததால் தான் இந்திய அணி வெற்றி பெற்றதாக பல முன்னாள் வீரர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.


இந்நிலையில், தி டெலிஃகிராப் ஊடகத்திற்கு பேட்டியளித்த இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் (Michael Vaughan), 'இந்தியா போன்ற பலமான நாடுகளை கேள்வி கேட்க, ஐசிசி பல் இல்லாமல் இருக்கிறது. இந்தியா எப்படிப்பட்ட பிட்ச்சை வேண்டுமானாலும் தயார் செய்து கொள்ளலாம். இதனை யாரும் தட்டி கேட்க முடியாது. இது டெஸ்ட் கிரிக்கெட்டின் தரத்தையே கெடுப்பதாகும்.

இரண்டு நாட்களிலேயே டெஸ்ட் போட்டி முடிவடைந்து விடுவதால், போட்டியை நேரலையாக ஒளிபரப்பும் நிறுவனங்கள், மூன்று நாட்கள் வீணாக சென்றதை எண்ணி, அதற்கான பணத்தை திரும்ப கேட்கும் நிலையில் உள்ளனர். மேலும், போட்டிகள் சீக்கிரம் முடிவடைந்து விடுவதால், வீரர்கள் சிறப்பாக ஆடவில்லை என அவர்கள் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. என்னை பொறுத்தவரையில், இந்த போட்டியில் வெற்றியாளர் யாருமில்லை.

இந்திய அணி திறமையை வெளிப்படுத்தியது என்பதை என்னால் மறுக்க முடியாது. ஆனால், இது போன்ற சூழ்நிலைகளில், இங்கிலாந்து அணியை விட இந்திய அணி திறமை வாய்ந்தது என கூறுவதைத் தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. என்னைப் போன்ற முன்னாள் வீரர்கள் பலர், இது போன்று மோசமாக தயாரிக்கப்படும் பிட்ச் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டே இருப்போம்' என கூறியுள்ளார்.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றிருந்த நிலையில், அந்த போட்டிகளிலும் சென்னை பிட்ச் மோசமாக தயார் செய்யப்பட்டிருந்ததாக வாகன் குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்