எனக்கு 'அவரு' ஃபிட்னஸோட இருக்குற மாதிரி தெரியலங்க...! என்ன தான் பெரிய 'சூப்பர்ஸ்டாரா' இருந்தாலும் 'கிரவுண்ட்ல' எப்படி விளையாடுறாரு...? அதானே முக்கியம்...? - வாகன் காட்டம்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபில் போட்டிக்கு தேவை முக்கியமானதே இதுதான், ஆனால் அதே அவர்கிட்ட இல்லை என கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர் கொல்கத்தா அணி ரசிகர்கள்.

நேற்று பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபில் டி-20 கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணியின் ஆல் ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸலின் செயல்பாடுகள் குறித்து சர்ச்சைகள் வெடித்துள்ளன.

நேற்று (18-04-2021) நடைபெற்ற போட்டியின் போது, ரஸ்ஸல் பெங்களூர் ஆட்டக்காரர் ஜேமிசனை எளிதாக ரன் அவுட் ஆக்கி இருக்கலாம். ஆனால் கையில் பந்து இருந்தபோதும் ஸ்டம்பில் ஓடிச்சென்று அடிக்காமல் சும்மா பொழுதுபோக்க வந்த மாதிரி நின்றிருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ரஸ்ஸலால் ஓட முடியவில்லை, அடுத்தப் போட்டியில் அவரை அணியில் சேர்க்க கூடாது என கருத்து தெரிவித்து வருகின்றனர். ரஸ்ஸலின் செயல் குறித்து கிரிக்கெட் வீரர்கள் சிலர் கடும் எதிர்ப்புகளையும்,விமர்சனங்களையும் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் வாகன் இந்த சம்பவம் குறித்து கூறும் போது, 'ஆண்ட்ரே ரஸ்ஸல் கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டார். என்னதான் சிறந்த வீரர் என்றாலும் களத்தில் எப்படி செயல்படுகிறார் என்பதும் முக்கியம்.

பீல்டிங்கின்போது பந்து அவர் அருகே வரும்போது குனிந்து எடுக்காமல் கால்களால் தடுக்கிறார். இதனை வேறு விதமாக அணுக்காமல், அவரால் கீழே குனிய முடியவில்லை என்றுதான் கூறவேண்டும். இவரை எப்படி கொல்கத்தா கேப்டன் மார்கன் திறமையாக சமாளிக்கப் போகிறார் என்பதுதான் தெரியவில்லை' என கேப்டனின் பரிதாப நிலையை கூறியுள்ளார்.

அதோடு, 'ரஸ்ஸல் இந்த முறை பவுலிங் செய்யும்போதும், பீல்டிங் செய்யும்போதும் மட்டும் திணறவில்லை, பேட்டிங்கின் போது இரண்டாவது ரன்னை அவரால் ஓடி எடுக்க முடியவில்லை.

டி-20 போட்டிகளில் மிகவும் முக்கியமானதே உடல் தகுதி தான். ஆனால் இப்போதைக்கு ரஸ்ஸலுக்கு போதிய உடற் தகுதி இருப்பதாக எனக்கு தெரியவில்லை' எனவும் தன்னுடைய காரசார கருத்தை கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்