மேக்ஸ்வெல் எல்லா மேட்ச்லையும் 'பட்டைய' கெளப்புறதுக்கு காரணம்... அந்த 'ரெண்டு பேரு' தான்...! 'எத வச்சு அப்படி சொல்றேன்னா...' - வாகனின் கணிப்பு...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலிய அணியின் காட்டடி ஆல் ரவுண்டர் மேக்ஸ்வெல்லுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தான் சரியான அணி என முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

மேக்ஸ்வெல் எல்லா மேட்ச்லையும் 'பட்டைய' கெளப்புறதுக்கு காரணம்... அந்த 'ரெண்டு பேரு' தான்...! 'எத வச்சு அப்படி சொல்றேன்னா...' - வாகனின் கணிப்பு...!

இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் ஆர்சிபி விளையாடிய மூன்று போட்டிகளில் விளையாடி உள்ள மேக்ஸ்வெல் 176 ரன்களை குவித்துள்ளார். அவரது அதிரடி ஆட்டம் பெங்களூரு அணியின் நம்பர் 1 இடத்திற்கு முக்கிய காரணம். எனவே தான் வாகன் இதனை தெரிவித்துள்ளார்.

Michael Vaughan said rcb was the right team for Maxwell

“கடந்த சில சீசன்களில் அதிரடியாக விளையாடவில்லை என்றாலும் மேக்ஸ்வெல்லுக்கு பெங்களூரு அணி தான் சரியான அணி.

அதன் காரணமாக தான் அவர் வேற லெவல் நடப்பு சீசனில் காட்டுகிறார். அதற்கு முக்கிய காரணம் இருவர். யாரென்றால் பெங்களூரு அணியில் விராட் கோலி, டிவில்லியர்ஸ் என இரு அதிரடி ஆட்டக்காரர்கள் உள்ளனர்.

இதன் காரணமாக மேக்ஸ்வெல் மீது பெரிய எதிர்பார்ப்பு எல்லாம் கிடையாது. எனவே பிற வீரர்களுக்கு உள்ள அழுத்தம் அவருக்கு இல்லை. ஆகவே அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மேக்ஸ்வெல் காட்டடி அடித்து வருகிறார்” என வாகன் கூறியுள்ளார்.

க்ளேன் மேக்ஸ்வெல் இதற்கு முன்பாக பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், மும்பை இண்டியன்ஸ் ஆகிய அணிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்