'ரசிகர்களை கடுப்பேத்துற மாதிரி ட்வீட் போட்டாலும்...' 'அப்பப்போ நல்ல ட்வீட்களையும் போட தான் செய்றாரு...' 'உலகத்துலையே பெஸ்ட் பவுலர் அவர் தான் என...' இந்திய பவுலரை புகழ்ந்த வாகன்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இந்திய பந்து வீச்சாளர் குறித்து மீண்டும் ட்விட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற டெஸ்ட், டி20 என இரண்டு தொடர்களையும் இந்திய அணி கைப்பற்றியது. அதன்பின் தற்போது புனே மைதானத்தில் நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் யார் வெற்றி கோப்பையை கைப்பற்றுவார்கள் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் 317 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக தவான் 98 ரன்களும், கே எல் ராகுல், விராட் கோலி மற்றும் க்ருனால் பாண்டியா ஆகியோர் அரைசதம் அடித்தார்.

                           

அதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்களான ராய் மற்றும் பேர்ஸ்டோ இருவரும் தங்களது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 135 ரன்களை வெறும் 14 ஓவர்களில் அடித்திருந்தது. ராய் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்த பிறகு ஒருவர்கூட நிலைத்து ஆட முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க இங்கிலாந்து அணி தடுமாற்றம் கண்டது.

                                        

இதற்கு காரணம் இந்திய அணியின் அதிரடி பந்து வீச்சளாரான புவனேஸ்வர் குமார். இவர் வெறும் 3 முதல் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்து வந்தார். இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பெற்றது.

                            

ட்விட்டரில் ஆக்ட்டிவ்வாக இருக்கும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் கிரிக்கெட் உலகில் நடைபெறுவது குறித்து எப்போதும் தன் கருத்தை டிவிட்டரில் பதிவிடுவார்.

                                         

அதேபோல் இன்றைய ஆட்டத்தில் பந்துவீச்சில் தனது ஆதிக்கத்தை செலுத்திவந்த புவனேஸ்வர் குமார் தனது ட்விட்டர் பதிவில் 'இன்றைய போட்டியில் மற்ற வீரர்கள் எப்படி தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சு தரமாக இருந்தது. அவர் உலகின் திறன்மிக்க வெள்ளை பந்து பந்துவீச்சாளர்'  என புகழந்து தள்ளியுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்