இனி பயமில்ல.. இந்தியா எதிர்காலம் பாதுகாப்பான கையில இருக்கு.. ஒரே போட்டியில் வாகனை அசரவைத்த இளம் வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் எதிர்காலம் பாதுகாப்பாக இருப்பாதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

Advertising
>
Advertising

19 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 290 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக இந்திய அணியின் கேப்டன் யாஷ் தல் 110 ரன்கள் எடுத்தார்.

இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 194 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ளது. வரும் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை இந்தியா சந்திக்க உள்ளது.

இந்த நிலையில் இந்திய அணியின் எதிர்காலம் பாதுகாப்பான கைகளில் இருப்பதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார். அதில், ‘19 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கான உலகக்கோப்பையில் இந்திய அணியின் பேட்டிங் உயர்தரமாக இருக்கிறது. இந்திய அணியின் எதிர்காலம் பாதுகாப்பானதாக இருக்கிறது. யாஷ் தல் இணையில்லாத வீரராக இருக்கிறார்’ என பாராட்டியுள்ளார்.

அரையிறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். அடுத்து வந்த வீரர்களும் வந்த வேகத்தில் நடையை கட்டினர். இந்த சமயத்தில் ஷேக் ரஷீத் (94 ரன்கள்) உடன் ஜோடி சேர்ந்த கேப்டன் யாஷ் தல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் (110 ரன்கள்) விளாசினார். அதனால் ரசிகர்கள் பலரும் இவரை அடுத்த விராட் கோலி என பாராட்டி வருகின்றனர்.

INDIAU19, MICHAELVAUGHAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்