'என்னடா இது பூரா ப்ளுவாவே இருக்கு'... 'மஞ்சளயே காணோம்'... 'வம்பிழுத்த முன்னாள் கேப்டன்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலியப் போட்டியில், குறைந்த அளவே ஆஸ்திரேலிய ரசிகர்கள் உள்ளதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை தொடரின் 12-வது போட்டி, ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து இந்திய அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. பின்னர் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்நிலையில் ஓவல் மைதானத்தில், ஆஸ்திரேலிய ரசிகர்கள் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான மைக்கேல் வாகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 'ஓவல் மைதானத்தில், ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் அதனுடைய ஊழியர்கள் சேர்த்தே மொத்தம் 33 ஆதரவாளர்கள்தான் இருப்பதாக' கூறியுள்ளார். மைதானம் முழுக்க இந்திய ரசிகர்களே அதிகம் நிறைந்து இருந்தார்கள். இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்கள்தான் இந்தப் போட்டியை காண அதிகம் வந்திருந்தனர். மக்கள் இருக்கும் இடம் முழுக்க நீல நிறத்தில் மட்டுமே இருந்தது.
மொத்தம் 25,000 பேர் இருக்கைகள் கொண்ட ஓவல் மைதானத்தில், 80 சதவீதம் டிக்கெட்டுகள் அதாவது கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர் இந்திய ரசிகர்கள் இந்திய அணிக்கு ஆதரவினை அளிக்க மைதானத்திற்கு வந்துள்ளனர். மீதியுள்ள 5,000 ரசிகர்கள் மட்டுமே ஆஸ்திரேலிய அணிக்கு ஆதரவாக மைதானத்தில் இருக்கின்றனர். இந்த ரசிகர் பட்டாளத்தை மூலம் இந்திய அணி தனது பலத்தை இங்கிலாந்திலும் நிலைநிறுத்தியுள்ளது .
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'என்னா அடி??'.. காட்டுப்பய சார் இந்த வார்னர்.. மைதானத்திலேயே சுருண்ட வீரர்!
- ‘வைரலாகும் இங்கிலாந்து வீரரின் சதமடிக்கும் வீடியோ..’ ஆனாலும் நீங்க இப்படி பண்ணியிருக்க வேணாம்..
- ‘இந்திய வீரர்களுக்கு அனுப்பப்பட்ட ஸ்பெஷல் கிஃப்ட்..’ உலகக் கோப்பையில் நெகிழ்ச்சி மொமென்ட்..
- 'எனக்கே விபூதி அடிக்க பாத்தில்ல'...'தோனி'க்கு எதிராக...திட்டம் போட்ட 'பாகிஸ்தான்'... பரபரப்பு தகவல்!
- இந்தியாவுக்கு எதிரானப் போட்டி... 'திட்டம் தீட்டிய பாகிஸ்தான் கேப்டன்'.. 'விளாசிதள்ளிய முன்னாள் பிரபல வீரர்'!
- காயம் சரியாகததால் விலகும் நட்சத்திர வீரர்..! மற்றொரு வீரருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!
- ‘நீங்களே இப்படி பண்ணலாமா..?’ விராட் கோலிக்கு அபராதம் விதித்த அதிகாரிகள்..
- ‘அவங்கல ரொம்ப கேர்ஃபுல்லா டீல் பண்ணனும்’.. ‘இல்லனா அவ்ளோதான்’.. முன்னெச்சரிக்கை விடுத்த சச்சின்!
- ‘நேசமணிக்கு அடுத்து உலகளவில் டிரெண்டான ஹேஷ்டேக்’.. ‘தல’ க்ளவுஸ் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!
- 'முட்டாள்கள்'... 'கிரிக்கெட் விளையாட போனாரா'?...'இல்ல,போருக்கு போனாரா'?...'தோனி' மீது பாய்ச்சல்!