"அவரு எப்பேர்பட்ட பிளேயர் தெரியுமா??.. அவர வெச்சு என்னய்யா பண்ணிட்டு இருக்கீங்க??..." கடுப்பான 'வாகன்'... 'பரபரப்பு' சம்பவம்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி, டெஸ்ட் மற்றும் டி 20 தொடர் என இரண்டையும் இழந்திருந்தது.

டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்தது. அதே போல, டி 20 தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றிருந்த இங்கிலாந்து அணி, கடைசி இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவி, அந்த தொடரையும் இழந்தது.

இங்கிலாந்து அணியின் தோல்வியை விமர்சனம் செய்த முன்னாள் வீரர்கள், குறிப்பாக இங்கிலாந்தின் ரொட்டேஷன் பாலிசி குறித்து, அதிகம் கேள்விகளை முன் வைத்திருந்தனர். டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் மட்டும் பங்கு பெற்றிருந்த மொயின் அலி (Moeen Ali), அதன் பிறகு தனது சொந்த மண்ணிற்கு திரும்பியிருந்தார். தொடர்ந்து, டி 20 தொடருக்காக மீண்டும் இந்தியா வந்த மொயின் அலியை ஒரு போட்டியில் கூட களமிறக்கவில்லை.

இந்நிலையில், மொயினை களமிறக்காதது பற்றி, இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், அணி நிர்வாகத்தை விமர்சனம் செய்து ட்வீட் ஒன்றை செய்துள்ளார். 'மொயின் அலி சிறந்த கலவையான வீரர். அவர் 2 டெஸ்ட் போட்டி மற்றும் ஒரு டி 20 போட்டியில் கூட களமிறங்கவில்லை' என தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

 


இந்திய அணியை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்த மைக்கேல் வாகன், தற்போது இங்கிலாந்து அணியின் ரொட்டேஷன் பாலிசி பற்றி, அணி நிர்வாகம் மீதும் கேள்விகளை எழுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் களமிறங்கிய மொயின் அலி, அந்த போட்டியில் 8 விக்கெட்டுகள் கைப்பற்றி, 18 பந்துகளில் 43 ரன்கள் அடித்து, அசத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. வரவிருக்கும் ஒரு நாள் தொடரிலும் மொயின் அலி இடம்பெற்றுள்ள நிலையில், அவர் களமிறங்குவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்