"இன்னைக்கி இந்தியா 'டீம்' இப்டி சிறப்பா இருக்குன்னா... அதுக்கு அவரு ஒருத்தரு தான் 'முக்கிய' காரணம்.. பாராட்டித் தள்ளிய 'வாகன்'!! "யாரா இருக்கும்??"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டித் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், முன்னதாக நடைபெற்றிருந்த டெஸ்ட் மற்றும் டி 20 தொடர் என இரண்டையும் இந்திய அணியே கைப்பற்றி அசத்தியிருந்தது.
அதிலும் குறிப்பாக, ஆஸ்திரேலிய தொடரில் இருந்தே, இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர்கள், மிகச் சிறப்பாக ஆடி வருகின்றனர். முன்னணி பந்து வீச்சாளர்கள் இல்லாத போதும், சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சிறப்பாக பந்து வீசி, வெற்றி பெற உதவினர்.
அதே போல, இங்கிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடரில் அறிமுகமான சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) மற்றும் இஷான் கிஷான் (Ishan Kishan) ஆகியோர், அறிமுக தொடர் என்ற பதற்றம் கூட இல்லாமல், எதிரணியினரின் பந்து வீச்சை சிதறடித்தனர்.
அதே போல, தற்போது நடைபெற்று வரும் ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில், அறிமுகமான பிரஷித் கிருஷ்ணா (Prasidh Krishna) மற்றும் க்ருணால் பாண்டியா (Krunal Pandya) ஆகியோரும் மிகச் சிறப்பாக ஆடி, இந்தியா வெற்றி பெற உதவியாக இருந்தனர். பிரஷித் கிருஷ்ணா 4 விக்கெட்களும், க்ருணால் பாண்டியா அறிமுக போட்டியில், வேகமாக அரை சதமடித்த வீரர் என்ற சாதனையும் படைத்திருந்தனர்.
கிரிக்கெட் உலகில் நம்பர் 1 அணியாக இந்தியா தற்போது வலம் வரும் நிலையில், இந்திய அணியின் தற்போதைய நிலைக்கு முக்கிய காரணம் யார் என்பதை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் (Michael Vaughan) தெரிவித்துள்ளார்.
'இந்திய அணி பின்னால் என்னென்ன நடைமுறைகள் செயல்படுகிறதோ, அது அனைத்தும் மிகச் சிறப்பான விஷயமாகும். இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர்களின் செயல்பாட்டிற்கு, ஐபிஎல் தொடர் எவ்வளவு முக்கியமாக கருதப்படுகிறதோ, அதைவிட ராகுல் டிராவிட் (Rahul Dravid) பயிற்சியில் இந்திய ஏ அணி, இளம் வீரர்களுக்கு சரியான மனநிலையை விதைத்து வருகிறது.
மேலும் டிராவிட்டின் பயிற்சியில், அவர்கள் ஆடுவதால், சரியான பாதையிலும் பயணிக்கின்றனர். இதனால், சர்வதேச அணியில் வாய்ப்பு கிடைக்கும் போது, அங்கு நிலவும் நெருக்கடியை இளம் வீரர்கள், சர்வ சாதாரணமாக கையாளுகின்றனர். இதற்கு முழுக் காரணம் டிராவிட் மட்டுமே.
இதனை சரியாக செய்து முடிக்க, அவர் ஒருவரால் மட்டுமே முடியும். இது எதிர்காலத்திற்கும் நன்மை பயக்கும் செயலாகும்' என டிராவிட்டை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார். அதே போல, பிரஷித் கிருஷ்ணாவின் சிறப்பான பந்து வீச்சையும் குறிப்பிட்டு, வாகன் பாராட்டியிருந்ததார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில், இந்திய அணி வெற்றி பெற்றாலும், அதனை அதிகம் கிண்டல் செய்து வரும் வாகன், இந்திய அணியின் இந்த சிறப்பான இடத்திற்கு, இந்திய அணியின் முன்னாள் வீரர் டிராவிட்டை பாராட்டிக் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "என்ன பாத்தா அப்டியாங்க தெரியுது??.." 'செய்தியாளர்' சந்திப்பில் 'ரோஹித்' செய்த 'காமெடி'... வீடியோ இப்போ செம 'வைரல்'!!
- "எத்தன தடவ தான் உங்க கிட்ட சொல்றது??..." 'ஸ்டோக்ஸ்' செயலால் எழுந்த 'சர்ச்சை'!... கடுமையாக எச்சரித்த 'நடுவர்'!!
- "அவரை எல்லாம் 'Red Card' குடுத்து தான் வெளிய அனுப்பனும்".. 'கோலி'யை கடுமையாக சாடிய முன்னாள் 'வீரர்'!... 'சர்ச்சை' சம்பவம்!!
- "என்ன பிரதர், இப்போ எப்படி இருக்கு??..." 'ரிஷப் பண்ட்' நக்கலாக கேட்ட 'கேள்வி'... வாயே தொறக்காம பதில் சொன்ன 'ரோஹித்'... 'வைரல்' வீடியோ!!
- 'ரசிகர்களை கடுப்பேத்துற மாதிரி ட்வீட் போட்டாலும்...' 'அப்பப்போ நல்ல ட்வீட்களையும் போட தான் செய்றாரு...' 'உலகத்துலையே பெஸ்ட் பவுலர் அவர் தான் என...' இந்திய பவுலரை புகழ்ந்த வாகன்...!
- "அட, என்னங்க இவரு.. எப்பவும் எதையாவது சொல்லிட்டே இருக்காரு..." மீண்டும் 'வாகன்' போட்ட 'ட்வீட்'... கோபத்தின் உச்சத்திற்கே சென்ற 'ரசிகர்கள்'!!
- அதிரடி '50' போட்ட 'க்ருணால்'... அடுத்த சில நொடிகளில் நடந்த 'சண்டை'... 'அதிர்ச்சி'யுடன் பார்த்த 'கோலி'... பரபரப்பு 'வீடியோ'!!
- "சத்தியமா வார்த்த ஒன்னும் வரல..." உடைந்து அழுத 'இந்திய' வீரர்.. "பாக்குறவங்க கண்ணே 'கலங்கி' போச்சு'ங்க.." மனதை நொறுக்கும் 'வீடியோ'!!
- 'எனக்கு டவுட்டே இல்ல...' 'மூணு one day மேட்ச்லையும் யாரு ஜெயிக்க போறாங்கன்னு guess பண்ணிட்டேன்...' - மைக்கேல் வாகன் போட்ட வைரல் ட்வீட்...!
- "ஒரு 'மேட்ச்' கூட முடியல, அதுக்குள்ளயா??..." பரபரப்பை ஏற்படுத்திய 'வாகனின்' 'ட்வீட்'!.. கடுப்பான 'இந்திய' ரசிகர்கள்!!