'இத' பார்க்குறதுக்கு எப்படி இருக்கு தெரியுமா?.. இங்கிலாந்தை சுருட்டிய கோலி-ரோகித் combo குறித்து... முன்னாள் வீரர் கொடுத்த செம்ம ஐடியா!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்துடனான 5வது தொடரில் சிறப்பாக ஆடியது மூலம் ரோகித் - கோலியை முக்கிய ஜாம்பவான்களுடன் ஒப்பிட்டுள்ளார் மைக்கேல் வாகன்.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20ல் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் ரோகித் - கோலி தொடக்க வீரர்களாக களம் இறங்கியதே பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில், இருவரின் பார்ட்னர்ஷிப்பையும் சச்சின் - சேவாக் ஜோடியுடன் ஒப்பிட்டு அதற்கான விளக்கத்தையும் கூறியுள்ளார் மைக்கேல் வாகன்.
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 224 ரன்களை எடுத்தது. இதற்கு முக்கிய காரணம் தொடக்க வீரர்களாக கேப்டன் கோலி மற்றும் துணைக்கேப்டன் ரோகித் சர்மா இருவரும் களமிறங்கியதுதான். சிறப்பாக ஆடிய இவர்களின் பார்ட்னர்ஷிப்பில் 94 ரன்களை குவித்தனர். ரோகித் சர்மா 64 ரன்களும் விராட் கோலி 80 ரன்களும் விளாசினர். இவர்களின் ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டது.
இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், "இந்த போட்டியை பார்க்கும் போது எனக்கு சேவாக் - சச்சின் ஜோடியை பார்ப்பது போல் இருந்தது. சச்சின் நிச்சயம் நிலைத்து நின்று பார்ட்னர்ஷிப் தருவார் என நம்பி சேவாக் பந்தை துவம்சம் செய்வார்.
அதே போல நேற்று ரோகித் சர்மா தொடக்கம் முதல் அதிரடி காட்ட, மறுமுனையில் விராட் கோலி, சச்சினை போன்று ஆஃப் சைட், ஃப்ரண் ஃபூட் ஷாட்களை ஆடி நிலைத்து நின்றார். இந்த திட்டத்தை சாஸ்திரி மற்றும் கோலி மிகுந்த தடுமாற்றத்திற்கு பிறகு செயல்படுத்தியுள்ளனர்" என தெரிவித்தார்.
இந்த போட்டியில் 3வது வீரராக சூர்யகுமார் யாதவ் களமிறங்கி 32 ரன்களை குவித்தார். இதுகுறித்து பேசிய வாகன், சூர்யகுமார் முதல் விக்கெட்டிற்கு சிறப்பாக ஆடினார். அவர் முழுக்க முழுக்க சர்வதேச போட்டியை ஆட தயாரானவர். எனவே, விராட் கோலி அவருக்காக எதையும் செய்ய வேண்டும். அவரை 4வது வீரராக களமிறக்காமல் 3வது வீரராக களமிறக்கினால் சிறப்பாக இருக்கும்.
இதுகுறித்து பேசிய கோலி, "நான் ஐபிஎல் தொடரிலும் இனி ஓப்பனிங் இறங்க உள்ளேன். நான் வெவ்வேறு இடங்களில் களமிறங்கி பேட் செய்திருக்கிறேன். ஆனால், இந்த ஆட்டத்தில் நானும் ரோகித்தும் மிடில் ஆர்டரில் சரியான ஆட்டத்தைக் கொடுத்திருப்பதாக உணர்கிறேன். அவருடன் தொடர்ந்து சேர்ந்து விளையாட விரும்புகிறேன். இந்த ஆட்டமுறையை வரும் போட்டிகளிலும், உலகக்கோப்பை போட்டியிலும் தொடர்வோம் என தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'டெத் ஓவர் போடுறதுல ஆள் கில்லி தான்...' 'பழைய ஃபார்மை அப்படியே மெயின்டெயின் பண்றாரு...' - இந்திய வீரரை புகழ்ந்து தள்ளிய கம்பீர்...!
- 'அவங்க ரெண்டு பேரும் டீம்ல இருந்தா...' 'கண்டிப்பா இந்தியா டி20 வேர்ல்டு கப் ஜெயிச்சிடும்...' - மைக்கேல் வாகன் சொல்ற அந்த 2 பேரு யாரு தெரியுமா...?
- இவங்க நடிப்புக்கு ‘ஆஸ்கர்’ நாமினேட் பண்ணலாம்.. கலாய்த்த யுவராஜ் சிங்.. அந்த ரெண்டு பேரும் யார் தெரியுமா..?
- ‘சொன்ன வாக்கை நிறைவேற்றிய ஆனந்த் மஹிந்திரா’!.. இந்தியா ஜெயிச்சதும் வெளியான அந்த போட்டோ..!
- 'ஒருநாள் போட்டிக்கு டீம் ரெடி...' 'ஆனா ஒருத்தர் மட்டும் மிஸ்ஸிங்...' 'ஐபிஎல்-யும் விளையாடுறது டவுட் தான்...' - இங்கிலாந்து அறிவிப்பு...!
- VIDEO: ‘சேட்டை புடிச்ச ஆளா இருப்பாரு போல’!.. ரோஹித் வரும்போது ‘கோலி’ என்ன பண்றாரு பாருங்க.. திடீரென வைரலாகும் பழைய வீடியோ..!
- ‘ஆமா.., இனிமேல் இது தொடரும்’!.. ‘அப்படி போடு சரவெடியை’.. போட்டி முடிந்தபின் ‘ஹேப்பி’ நியூஸ் சொன்ன கோலி..!
- 'யார்க்கர் கிங்' நடராஜனுக்காக பிசிசிஐ வைத்துள்ள 'ஸ்பெஷல் திட்டம்'!.. பொதுவெளியில் போட்டு உடைத்த கோலி!.. மஜா பா... மஜா பா!
- கல்யாண போட்டோ போட்டது ஒரு குத்தமா?.. திடீரென பும்ரா மீது கொந்தளித்த நெட்டிசன்கள்!.. ஏன் இந்த ரணகளம்?
- டி20 உலக கோப்பைக்கு முன்னாடி... இந்தியாவுக்கு இவ்ளோ போட்டிகளா!?.. பிசிசிஐ-யின் மெகா திட்டம் 'இது' தான்!.. எவ்ளோ சைலண்டா வேல பார்க்குறாங்க!!