“இன்னும் 2 வருசத்துல இந்தியாவுக்கு புது கேப்டன் தேவைப்பட்டா.. பாண்ட்யாவை போடுங்க”.. முன்னாள் வீரர் பரபரப்பு டுவீட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணிக்கு புதிய கேப்டன் தேவைப்பட்டால் ஹர்திக் பாண்ட்யாவை பரிந்துரைப்பேன் என்று முன்னாள் வீரர் கூறியுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | IPL தொடரில் கடும் விமர்சனத்தை சந்தித்த ரியான் பராக்.. அடுத்த சீசனில் மாறும் ரோல்?.. RR கோச் முக்கிய தகவல்..!

இந்தியாவில் நடந்த 15-வது சீசன் ஐபிஎல் தொடர் சமீபத்தில் நிறைவடைந்தது. இதன் இறுதிப்போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதனைத் தொடர்ந்து 131 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி விளையாடியது. அதில் சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா மற்றும் டேவிட் மில்லர் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் 18.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் குவித்து குஜராத் அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் அறிமுக ஐபிஎல் தொடரிலேயே கோப்பையை வென்று குஜராத் அணி அசத்தியுள்ளது. இப்போட்டியில் பந்து வீச்சில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய பாண்டியா, பேட்டிங்கிலும் 34 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், ஹர்திக் பாண்ட்யாவை பாராட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ‘அறிமுக சீசனிலேயே மிக அருமையான சாதனையை குஜராத் அணி செய்துள்ளது. இன்னும் 2 வருடங்களில் இந்திய அணிக்கு புதிய கேப்டன் தேவைப்பட்டால் நிச்சயம் நான் ஹர்திக் பாண்ட்யாவை தாண்டி வேறு யாரையும் பரிந்துரைக்க மாட்டேன்’ என மைக்கேல் வாகன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஐபிஎல் சீசன் முழுவதும் அற்புதமாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கில் 487 ரன்களையும், பந்துவீச்சில் 8 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்த சூழலில் வரும் ஜூன் மாதம் நடைபெற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாட இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | “சஞ்சு சாம்சன் அப்படி சொன்னது ஆச்சரியமா இருந்துச்சு”.. IPL final-ல் RR அணி செய்த தவறு.. சுட்டிக்காட்டிய சச்சின்..!

 

CRICKET, MICHAEL VAUGHAN, HARDIK CAPTAINCY, IPL 2022, ஐபிஎல், ஹர்திக் பாண்டியா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்