‘இது ரொம்ப ஓவர்' .. 'ஆனாலும் ஜெயிச்சுட்டோம்னு இப்டியா பண்ணுவீங்க?’.. வீரர்களின் ட்விட்டர் சண்டை!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடந்த வியாழன் (ஜூலை 12, 2019) அன்று நடந்த உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலியா இங்கிலாந்தை வீழ்த்தி, அடுத்த இலக்கை நோக்கி வெற்றி வாகை சூடும் என்று பலரும் கருதிய நிலையில், அத்தனையும் தவிடுபொடியாக்கிய இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது.

‘இது ரொம்ப ஓவர்' .. 'ஆனாலும் ஜெயிச்சுட்டோம்னு இப்டியா பண்ணுவீங்க?’.. வீரர்களின் ட்விட்டர் சண்டை!

குறிப்பாக ஜேசன் ராயின் அதிரடி ஆட்டம், வோக்ஸின் பந்துவீச்சு, ஆர்ச்சரின் மிரட்டலான ஆட்டம் என எல்லாமும் சேர்ந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து அணி வீழ்த்துவதற்கு காரணமாகியது. 1992க்கு பிறகு மீண்டும் ஃபைனலுக்கு போகும் இங்கிலாந்து அணி, இதுவரை 5 முறை உலக சாம்பியன் ஆகிய ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது.

இந்த சூழலை ஆட்டத்தின் 15வது ஓவரிலேயே காண முடிந்தது. அப்போதுதான் இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை எதிர்கொண்டு பந்தாடிக் கொண்டிருந்த சமயத்தில், முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மைக்கேல் வான், ‘ஆஸ்திரேலிய வீரர்கள் இனி வெற்றுக் கால்களுடன் தான் பந்து வீச வேண்டும்’ என்று கிண்டல் செய்துள்ளார்.

இதனால் டென்ஷனான ஆஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட், ‘இடியட்’ என்று ரி-ட்வீட் செய்தார்.  

இதற்கு பதில் கொடுக்கும் வகையில், வெறும் கால்களுடன் இருக்கும் GIF இமேஜ் ஒன்றை பதிவிட்டு ரி-ட்வீட் செய்தார்.

ட்விட்டர் ரசிகர்களும், ‘ஆனாலும் ஜெயிச்சுட்டோம்னு ரொம்ப பண்றீங்க பா’ என்று, இங்கிலாந்து கிரிக்கெட் பிரபலம் மைக்கேல் வானை வறுத்தெடுத்துள்ளனர்.

ICCWORLDCUP2019, ICCWORLDCUP, GILCHRIST, MICHAEL VAUGHAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்