"அது அவ்ளோ தான்.. முடிஞ்சு போச்சு.." ஜடேஜா - சிஎஸ்கே பத்தி முன்னாள் வீரர் சொன்ன பரபரப்பு கருத்து..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடப்பு ஐபிஎல் தொடரில், பலம் வாய்ந்த இரு அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறி உள்ளது.
Also Read | ‘ஈபிள் டவரை விட பெரிசு’.. பூமியை நோக்கி வேகமாக வரும் சிறுகோள். நாசா எச்சரிக்கை..!
கடந்த ஐந்து சீசன்களில், மும்பை அணி 3 முறையும், சென்னை அணி 2 முறையும் கைப்பற்றி உள்ளது. தொடர்ந்து, இந்த இரு அணிகளும் இல்லாமல், மற்றொரு அணி ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை கைப்பற்றவுள்ளது.
இதில், சிஎஸ்கே அணி ஆரம்பத்தில் இருந்தே நிறைய தடுமாற்றங்களை கண்டிருந்தது. தோனி கேப்டன் பதவியில் இருந்து தொடருக்கு முன்பாக மாற, சென்னை அணியை ஜடேஜா தலைமை தாங்கி இருந்தார்.
பிளே ஆப் வாய்ப்பை இழந்த சிஎஸ்கே
அவரது தலைமையில் 8 போட்டிகள் ஆடி இருந்த சிஎஸ்கே, இரண்டில் மட்டுமே வெற்றி கண்டிருந்தது. இதனையடுத்து, கேப்டன் பதவியில் இருந்து ஜடேஜா விலக, மீண்டும் தோனி கேப்டன் பொறுப்பை பார்த்துக் கொண்டார். அவரது தலைமையில், 4 போட்டிகளில் இரண்டில் வெற்றி கண்டுள்ள சிஎஸ்கே, மும்பை அணிக்கு எதிராக நேற்றைய போட்டியில் தோற்றதால், பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்துள்ளது.
காயத்தால் விலகிய ஜடேஜா..
இதற்கு மத்தியில், ஜடேஜாவும் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார். மொத்தம் 10 போட்டிகள் ஆடி இருந்த ஜடேஜா, 116 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். பந்து வீச்சிலும் ஐந்து விக்கெட்டுகள் மட்டும் எடுத்திருந்தார் ஜடேஜா.
இதனிடையே, ஜடேஜாவுக்கும் சிஎஸ்கே நிர்வாகத்திற்கும் மோதல் இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி, பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது. சென்னை அணியை விட்டு, ஜடேஜா விலகுவதாக தகவல் வலம் வந்த நிலையில், இதனை முற்றிலும் மறுத்து கருத்து தெரிவித்திருந்தார் சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன்.
இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் வாகன், ஜடேஜா மற்றும் சிஎஸ்கே அணி குறித்து சில பரபரப்பு கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அது அவ்ளோ தான்..
"ஜடேஜாவுக்கு என்ன காயம் ஏற்பட்டது, அவரின் கேப்டன் பதவி எந்த அளவுக்கு அவரை பாதித்தது என்பது தெரியவில்லை. பயோ பபுள் விதிமுறைகளால் ஜடேஜா எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டார் என்பதும் சரிவர தெரியவில்லை. வீரர்கள் அனைவரும் பயோ பபுள் விதியில் இருப்பதால், அது அவர்களை மிகவும் மோசமானதாக மாற்றி விடுகிறது. அங்குள்ள சூழலையே அவர்களால் எதிர்க்கொள்ள முடியவில்லை.
சென்னை அணியில் தொடர்ந்து ஜடேஜாவின் நிலை என்ன என்பது கேள்விக்குறி ஆகி உள்ளது. ஆனால் சென்னை அணியுடனான ஜடேஜாவின் பிணைப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டது என்றே நான் கருதுகிறேன்" என மைக்கேல் வாகன தெரிவித்துள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- காயத்தால் விலகிய ஜடேஜா.. "அவர மாதிரி ஒருத்தரு.." ஆல் ரவுண்டர் பற்றி தோனி சொன்ன வார்த்தைகள்
- "இது எல்லாம் கொஞ்சம் கூட நியாயம் இல்லங்க.." கொதித்த சிஎஸ்கே ரசிகர்கள்.. முதல் ஓவரிலேயே நடந்த 'சர்ச்சை'..
- “இதே தான் ரெய்னாவுக்கும் நடந்தது”.. அப்டின்னா அடுத்த வருஷம் ஜடேஜா CSK-ல இருக்க மாட்டாரா..? முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து..!
- Instagram-ல் ஜடேஜாவை அன்ஃபாலோ செய்ததா CSK? திடீரென வெடித்த புது சர்ச்சை.. CEO கொடுத்த விளக்கம் என்ன..?
- ஸ்டாண்டிங்கே ஒரு தினுசா இருக்கே... பேட்டிங் அப்போ அஷ்வின் கொடுத்த போஸ்.. வைரல் புகைப்படம்..!
- “எனக்கு இப்படி எல்லாம் நடந்ததே இல்ல… டக் அவுட் ஆகிவிட்டு சிரித்தது ஏன்?” …. கோலி சொன்ன கூல் பதில்!
- "அன்னைக்கி 117 கிலோ இருந்தேன்.. ஆனா, இன்னைக்கி சீனே வேற".. CSK இளம் வீரரின் 'Motivational' குட்டி ஸ்டோரி
- இந்தியாவுக்கு ஆடாமலே 10 கோடி சம்பளம் கொடுத்தா.. எப்படி 'அதுல' விளையாடுவாங்க? இளம் வீரர்கள் மீது கொந்தளித்த யுவராஜ் சிங்! பின்னணி தகவல்கள்
- தோல்வி அடைந்த லக்னோ.. அணி வீரர்கள் மீது கௌதம் கம்பீர் காட்டம்! பரபரப்பு வீடியோ
- '2' வருஷமா வாய்ப்பு கொடுக்காத 'CSK' .. வந்ததும் குஜராத் அணி கொடுத்த சான்ஸ்.. தமிழக வீரரை வாழ்த்தும் ரசிகர்கள்