முன்னாள் கிரிக்கெட் வீரரை மனநல மருத்துவமனைக்கு அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம்.. என்ன காரணம்? வெளியான பரபரப்பு தகவல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரை மனநல மருத்துவமனைக்கு செல்ல நீதிமன்றம் உத்தரவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரரை மனநல மருத்துவமனைக்கு அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம்.. என்ன காரணம்? வெளியான பரபரப்பு தகவல்..!
Advertising
>
Advertising

Also Read | “எங்களை காப்பாத்துங்க”.. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த பெண்ணின் போன் கால்.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான மைக்கேல் ஸ்லேட்டர், 1993-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை 74 டெஸ்ட் மற்றும் 42 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதனை அடுத்து கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர், வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.

இந்த சூழலில் கடந்த அக்டோபர் மாதம் குடும்ப வன்முறை குற்றச்சாட்டு காரணமாக மைக்கேல் ஸ்லேட்டரை போலீசார் கைது செய்தனர். தனது முன்னாள் மனைவிக்கு ஏகப்ப்பட்ட அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் அனுப்பியதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த வேவர்லி நீதிமன்றம், மைக்கேல் ஸ்லேட்டருக்கு சிறைத்தண்டனை விதிக்க மறுத்துவிட்டது. ஆனால் அவர் மூன்று வாரங்கள் மனநலப் பிரிவில் ஆலோசனை பெற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மைக்கேல் ஸ்லேட்டர் ஏற்கனவே ஐந்து தனித்தனி மனநல மருத்துவர்களைப் பார்த்துள்ளார். மேலும் 100 நாட்களுக்கும் மேலாக பல்வேறு மனநல சுகாதார நிலையங்களில் தங்கி சிகிச்சை பெற்றதாக ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கழகம் (ஏபிசி) தகவல் தெரிவித்துள்ளது. குடும்ப வன்முறை வழக்கில் மைக்கேல் ஸ்லேட்டர் மனநலப் பிரிவில் இருக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

MICHAEL SLATER, MENTAL HEALTH HOSPITAL, DOMESTIC VIOLENCE, AUSTRALIA STAR CRICKETER, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர், மைக்கேல் ஸ்லேட்டர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்