“அன்னைக்கு அழுதுட்டே தான் பேசுனாரு”.. வீரர்கள் முன் கண்கலங்கிய ‘தல’ தோனி.. இதுவரை யாருக்கும் தெரியாத சம்பவத்தை சொன்ன CSK பேட்டிங் கோச்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி கண்கலங்கி பேசிய சம்பவம் குறித்து பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதனால் பிளே-ஆப் சுற்றுக்கு நுழைவது கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி கண்கலங்கி பேசிய நிகழ்வு குறித்து அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி பகிர்ந்துள்ளார். அதில், ‘2018-ம் ஆண்டு எங்களுக்கு மறக்கமுடியாத சீசன். நாங்கள் இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் தொடர்ந்து இருந்து தடை செய்யப்பட்டிருந்தோம். எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது, நாங்கள் திரும்ப வந்ததும் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக தோனி அனைவரிடமும் பேசினார். அப்போது அழுது கொண்டேதான் தோனி பேசினார். இந்த சீசன் சிறப்பாக அமைய உள்ளது என தோனி கூறினார். அவர் சொன்னது போலவே அந்த சீசன் ஸ்பெஷலான ஒன்றாகவே அமைந்தது.

இது உங்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தும் விஷயமாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். இரண்டு வருடங்களுக்கு பிறகு திரும்பி வந்ததும், இதை சிறப்பான கம்பாக கருதுகிறோம். அந்த சீசன் முழுவதும் தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்’ மைக்கேல் ஹஸ்ஸி என கூறியுள்ளார்.

சூதாட்ட புகார் காரணமாக 2016 மற்றும் 2017 ஆகிய இரு ஆண்டுகள் ஐபிஎல் தொடர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடை செய்யப்பட்டது. அதனால் அப்போது புனே அணியின் சார்பாக தோனி விளையாடினார். இதனை அடுத்து 2018-ம் ஆண்டு மீண்டும் சிஎஸ்கே அணிக்கு திரும்பினார். அந்த ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி சிஎஸ்கே அணி கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://www.behindwoods.com/bgm8/

CSK, MSDHONI, IPL, MICHAEL HUSSEY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்