'CSK' ரெய்னா கூட கொஞ்ச நேர சந்திப்பு.. இனிமே கிரிக்கெட் தான் வாழ்க்க'ன்னு முடிவு எடுத்த இளம் வீரர்.. "இன்னைக்கி 'MI'ல ஸ்டார் பிளேயர்"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரில் நம்பர் 1 வீரராக வலம் வந்த சுரேஷ் ரெய்னா, கடந்த பிப்ரவரி மாதத்தில் நடந்த மெகா ஏலத்தில், 'Unsold' என அறிவிக்கப்பட்டிருந்தார்.

Advertising
>
Advertising

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சுமார் 10 ஐபிஎல் சீசன்களுக்கு மேல் ஆடி, பல சாதனைகளை படைத்துள்ள ரெய்னாவை, சிஎஸ்கே உள்ளிட்ட எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்க முன் வரவில்லை.

ஐபிஎல் அணிகளின் முடிவு, ரெய்னா ரசிகர்கள் மத்தியில் கடும் வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது.

வர்ணனை பக்கம் ரெய்னா

15 ஆவது ஐபிஎல் தொடரில், சென்னை அணி மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ள நிலையில், ரெய்னாவை ஒப்பிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர். ஐபிஎல் போட்டிகளில் ரெய்னா களமிறங்கவில்லை என்றாலும், தற்போதைய தொடரின் வர்ணனையாளராக ரெய்னா செயல்பட்டு வருவதால், ரசிகர்கள் ஓரளவுக்கு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மும்பை அணியின் அதிரடி இளம் வீரர்

இந்நிலையில், ரெய்னாவை பார்த்து முழுக்க முழுக்க கிரிக்கெட் பக்கம் திரும்பி, இன்று ஐபிஎல் தொடரில் அசத்தி வரும் இளம் வீரர் பற்றிய அசத்தல் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி, இரண்டிலும் தோல்வி அடைந்துள்ளது. அந்த அணியில் இடம்பெற்றுள்ள 20 வயதாகும் இளம் வீரர் திலக் வர்மா, முதல் போட்டியில் 22 ரன்களும், இரண்டாவது போட்டியில் அதிரடியாக ஆடி 61 ரன்களும் எடுத்திருந்தார்.

அறிமுக தொடரிலேயே அசத்தி வரும் திலக்கை பலரும் பாராட்டி வருகின்றனர். அதே போல, திலக்கின் கிரிக்கெட் பயணத்திற்கு பின்னால், சுரேஷ் ரெய்னா இருந்தது பற்றியும் ஒரு சுவாரஸ்ய தகவல் கிடைத்துள்ளது. தில்க்கின் 12 வயதின் போது, அவரது கிரிக்கெட் பயிற்சியாளராக சலாம் பயஸ் என்பவர் இருந்தார்.

ரெய்னாவுடனான சந்திப்பு

கடந்த 2014 ஆம் ஆண்டின் போது, சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் ஐபிஎல் போட்டியில் மோதி இருந்தன. இதற்கு முன்பாக, சென்னை அணி பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அதனைக் காண வேண்டி, சலாம் மற்றும் திலக் ஆகியோர் சென்றிருந்தனர். இது பற்றி பேசும் சலாம், "எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர், அங்கு மேனேஜராக இருந்தார். அவரின் உதவியுடன் பயிற்சியைக் காண அனுமதி பெற்று, 12 வயது திலக்கை உடன் அழைத்துக் கொண்டு கிளம்பினேன்.

ஆச்சரியத்துடன் பார்த்த திலக்

அப்போது, ரெய்னா பேட்டிங் செய்து கொண்டிருந்ததை விரிந்த பார்வையுடன், மிகவும் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தார் திலக். ரெய்னாவின் ஒவ்வொரு ஷாட்டையும் உன்னிப்பாக பார்த்தார். அதன் பின்னர், ரெய்னாவை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டோம். ரெய்னாவுடனான அந்த ஸ்பெஷல் சந்திப்பு தான், நிச்சயம் திலக்கை கிரிக்கெட் வீரராக மாற வேண்டும் என முடிவு எடுக்க வைத்திருக்கும்" என சலாம் குறிப்பிட்டுள்ளார்.

சுரேஷ் ரெய்னாவை சந்திக்க கிடைத்த ஒரே ஒரு வாய்ப்பு, 12 வயது சிறுவனின் வாழ்க்கையை இன்று ஐபிஎல் தொடர் வரை கொண்டு சேர்த்துள்ளது. முன்னதாக, திலக் வர்மாவை ஐபிஎல் மெகா ஏலத்தில், 1.7 கோடி ரூபாய்க்கு மும்பை அணி ஏலத்தில் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SURESHRAINA, TILAK VARMA, CSK, MI, IPL 2022, சுரேஷ் ரெய்னா, திலக் வர்மா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்