"இப்ப பாரு, யார்க்கர் எப்படி போடுறேன்னு.." பந்துடன் கெத்தாக கிளம்பிய ரோஹித்.. கடைசி'ல நடந்தத பாக்கணுமே.. 'செம' வீடியோ!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக விளங்கி வந்த மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு தொடரில் மிக மோசமான சாதனைகளை படைத்து வருகிறது.

Advertising
>
Advertising

ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, இதுவரை ஐந்து முறை ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றி உள்ளது.

வேறு எந்த அணிகளும் நான்கு முறைக்கு மேல் ஐபிஎல் கோபப்பையை வென்றது கிடையாது. கடைசியாக, 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை வென்றிருந்த மும்பை இந்தியன்ஸ், 2021 ஆம் ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறி இருந்தது.

மும்பை அணியின் மோசமான சாதனை

தொடர்ந்து, தற்போதைய சீசனில் இதுவரை 8 போட்டிகள் ஆடியுள்ள மும்பை அணி, அனைத்திலும் தோல்வி அடைந்துள்ளது. இதுவரை ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில், எந்த அணிகளும் முதல் 7 போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்தது கிடையாது. ஆனால், இந்த முறை 8 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ள மும்பை அணி, மோசமான சாதனையை படைத்துள்ளது.

பறிபோன பிளே ஆப் வாய்ப்பு

மீதமுள்ள ஆறு போட்டிகளில், வெற்றி பெற்றால் கூட பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது என்பது, மும்பை அணிக்கு இயலாத காரியம் தான். இதனால், இனி வரும் போட்டிகளிலாவது அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால், சிறந்த வீரர்கள் இருந்தும் அணியில் என்ன தவறு இருக்கிறது என்பதை அறிந்து கொண்டால் தான், தோல்வியில் இருந்து மும்பை அணியால் மீண்டும் வெற்றிகளை பெற முடியும்.

ரோஹித் செய்த 'Fun'

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மா, பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, யார்க்கர் பந்தினை தான் வீசப் போவதாக கூறி பந்துடன் செல்கிறார். ஆனால், அவர் வீசிய பந்தோ, ஷார்ட் பிட்ச் பந்தாக செல்ல, அங்கிருந்த ஒருவர் ஜஸ்ட் மிஸ் என கூறுகிறார்.

 

ரோஹித்தை Fun செய்யும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

ROHIT SHARMA, MUMBAI INDIANS, IPL 2022, மும்பை இந்தியன்ஸ், ரோஹித் ஷர்மா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்