‘இப்படி பண்ணிட்டோமே’.. சோகமாக உட்கார்ந்த சூர்யகுமார்.. அப்போ பொல்லார்டு செய்த செயல்.. மனுசன் வேறலெவல்யா..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சூர்யகுமார் யாதவுக்கு பொல்லார்டு ஆறுதல் சொன்ன வீடியோ இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

Advertising
>
Advertising

"உங்க ஏரியா-ல மின்சாரம் துண்டிப்பா? இத மறக்காம செய்யுங்க".. அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி..!

ஐபிஎல் தொடரின் 23-வது லீக் போட்டி நேற்று புனே மைதானத்தில் நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 198 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 70 ரன்களும், மயங்க் அகர்வால் 52 ரன்களும், ஜித்தேஷ் சர்மா 30 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 28 ரன்களிலும், இஷான் கிஷன் 3 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த டெவால்ட் ப்ரீவிஸ் மற்றும் திலக் வர்மா ஆகியோர் சிறப்பான கூட்டணி அமைத்தனர். அதனால் மும்பை அணியின் ஸ்கோர் மெதுவாக உயர்ந்தது.

இந்த சமயத்தில் ஒடியன் ஸ்மித் ஓவரில் டெவால்ட் ப்ரீவிஸ் அவுட்டாக, அடுத்து திலக் வர்மாவும் ரன் அவுட்டாகி வெளியேறினார். இதனால் 131 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை மும்பை அணி இழந்தது. இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ், பொல்லார்டு கூட்டணி சிறப்பாக விளையாடியது. அதில் சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் மழை பொழிந்தார். அதனால் மும்பை அணி சரிவில் இருந்து மீண்டு வெற்றிப்பாதைக்கு திரும்பிக் கொண்டிருந்தது. கடைசி 4 ஓவர்களுக்கு 49 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் மும்பை அணி இருந்தது.

இந்த சமயத்தில் போட்டியின் 17-வது ஓவரின் முதல் பந்தில் சூர்யகுமார் யாதவின் தவறான அழைப்பினால் 2-வது ரன்னுக்கு தேவையில்லாமல் ஓடி பொல்லார்டு ரன் அவுட் ஆனார். இது போட்டியில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இப்படி முக்கியமான கட்டத்தில் பொல்லார்டை ஆட்டமிழக்க வைத்து விட்டோமே என சூரியகுமார் யாதவ் தரையில் அமர்ந்து தனது சோகத்தை வெளிப்படுத்தினார்.

அப்போது அங்கு வந்த பொல்லார்டு, சூர்யகுமார் யாதவிடம் ஆறுதலாக சில வார்த்தைகளை சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினார். பொல்லார்டின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனை அடுத்து வெற்றிக்காக போராடிய மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் மும்பை தோல்வி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | ‘மேட்ச்ச மாத்துன அந்த ஒரு ஓவர்’…’கிரவுண்ட்டுக்கு ஓடி வந்த ரோஹித் ஷர்மா’ – குட்டி டிவில்லியர்ஸின் ’தெறி’ இன்னிங்ஸ்

 

CRICKET, IPL, IPL 2022, MI, KIERON POLLARD, SURYAKUMAR YADAV, MI POLLARD, பஞ்சாப் அணி, ஐபிஎல், சூர்யகுமார் யாதவ், பொல்லார்டு

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்