"9 வருசமா வீட்டுக்கே நான் போகல.. ஐபிஎல் முடிஞ்சதும்.." உருக வைத்த 'MI' வீரர்.. "எதுக்காக இவ்ளோ நாள் Waiting??"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக வலம் வந்த மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்டது.

Advertising
>
Advertising

Also Read | “நீ இல்லன்னா நான் என்ன செஞ்சிருப்பேன்”… அனுஷ்கா சர்மா பற்றி கோலியின் Romantic பதிவு!

முதல் 8 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வி அடைந்திருந்த மும்பை அணி, பல மோசமான சாதனைகளையும் படைத்திருந்தது.

தொடர்ந்து, தங்களின் 9 ஆவது லீக் போட்டியில், ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஆடி இருந்த மும்பை, 15 ஆவது ஐபிஎல் தொடரில் தங்களின் முதல் வெற்றியை பதிவு செய்திருந்தது.

மும்பை இந்தியன்ஸின் முதல் வெற்றி

இந்த போட்டியில் முதலில் ஆடிய ராஜஸ்தான், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி, கடைசி ஓவரில் இலக்கை எட்டிப் பிடித்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இனியுள்ள 5 போட்டிகளில் வெற்றி பெற்றாலும், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாது என்றாலும், மற்ற அணிகளின் பிளே ஆப் சுற்று வாய்ப்பை மும்பை அணியால் மாற்றக் கூட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

அறிமுகமான இளம் வீரர்

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுகமான இளம் வீரர் குறித்து மிக நெகிழ்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், மும்பை அணியில் மாற்று வீரராக இடம்பெற்றிருந்த குமார் கார்த்திகேயாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. ஐபிஎல்லில் கார்த்திகேயா ஆடிய முதல் போட்டி இதுவாகும்.

சச்சின் கொடுத்த அறிவுரை

சுழற்பந்து வீச்சாளரான இவர், 4 ஓவர்கள் பந்து வீசி, 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து, ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனின் விக்கெட்டையும் எடுத்திருந்தார். முக்கிய விக்கெட்டை வீழ்த்தி இருந்த கார்த்திகேயா பக்கம் பலரது கவனமும் திரும்பி இருந்தது. தொடர்ந்து போட்டிக்கு பின்னர், ஐபிஎல் அறிமுகம் பற்றி பேசிய கார்த்திகேயா, "நான் ஆட போகிறேன் என தெரிந்ததும் சற்று பதற்றமாக இருந்தேன். ஆனால், அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் ஒரே இரவில் திட்டம் போட்டேன். சஞ்சு சாம்சனுக்கு அவரது கால்களில் பந்து வீச முயற்சி செய்தேன். சச்சின் அவர்கள் எனக்கு அறிவுரை வழங்கியது, பெரிய நம்பிக்கையை அளித்திருந்தது" என கூறினார்.

9 வருஷமா வீட்டுக்கு போகல..

தொடர்ந்து பேசிய கார்த்திகேயா, "நான் 9 ஆண்டுகளாக எனது வீட்டிற்கு செல்லவில்லை. வாழ்க்கையில் ஏதாவது சாதித்தால் தான், வீடு திரும்ப வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். எனது அம்மாவும், அப்பாவும் என்னை அடிக்கடி அழைத்தார்கள். ஆனால், நான் எனது முடிவில் உறுதியாக இருந்தேன். இறுதியாக, ஐபிஎல் முடிந்த பிறகு நான் வீடு திரும்பவுள்ளேன்" என குமார் கார்த்திகேயா தெரிவித்துள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

MUMBAI INDIANS, KUMAR KARTIKEYA, ஐபிஎல், மும்பை இந்தியன்ஸ் அணி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்