இந்த மேட்ச்லையும் ‘ஹிட்மேன்’ இல்லையா..! என்னதான் ஆச்சு..? அவர இப்டி பார்க்க முடியல..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரின் 48-வது லீக் போட்டி இன்று அபுதாபி மைதானத்தில் நடைபெறுகிறது.

இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள இரு அணிகளும் 7 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடத்தில் அடுத்தடுத்து உள்ளன. இன்றைய போட்டியில் வெற்றி பெரும் அணி முதலாவதாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லும் என்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.

இன்றைய போட்டியில் ரோஹித் ஷர்மா விளையாடவில்லை. ஏற்கனவே காயம் காரணமாக சென்னை அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடவில்லை. அதனால் பொல்லார்ட் கேப்டனாக மும்பை அணியை வழி நடத்துகிறார்.

ஆனால் இன்றைய போட்டி பெங்களூரு அணிக்கு என்பதால் ரோஹித் ஷர்மா விளையாடுவார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஏனென்றால் ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை. இது அவரது ரசிகர்களிடையே அதிர்ப்தியை ஏற்படுத்தி பெரும் சர்ச்சையை கிளப்பியது. விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா இடையே உரசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் சமூக வலைதளங்களில் ரோஹித் ஷர்மாவின் ரசிகர்கள், பிசிசிஐ மற்றும் கேப்டன் விராட் கோலியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கரும் ரோஹித் ஷர்மாவை அணியில் எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். பெங்களூருக்கு எதிரான போட்டியில் ரோஹித் ஷர்மா விளையாடவில்லை என்றால் மும்பை அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஓஜா கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் ரோஹித் ஷர்மாவின் காயம் குறித்து தெரிவித்த பொல்லார்ட், அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் சரியாகி வருகிறது’ என அவர் தெரிவித்தார். ரோஹித் ஷர்மாவின் ரசிகர்களும் அவர் இன்று விளையாடதது குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்