ரோஹித்தை சீண்டிய சேவாக்?.. ஒரே ஒரு ட்வீட்டால் கொதித்த MI ரசிகர்கள்.. "உண்மை'ல என்ன தாங்க நடந்துச்சு?"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடர்களில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணி, தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் சீசனை தோல்விகளுடன் தொடங்கி உள்ளது.

Advertising
>
Advertising

"தெரியாம சச்சின அவுட் எடுத்துட்டேன்.." மைதானத்திலேயே அக்தருக்கு நடந்த சம்பவம்.. "உங்கள யாரு இது எல்லாம் பண்ண சொன்னா?"

முந்தைய சில சீசன்களை போல, ஆரம்பத்தில் மும்பை அணி தோல்வியை சந்தித்து, பின் வெற்றி பாதைக்கு திரும்பி வருவது போல, இந்த முறை நடக்குமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

இதற்கு காரணம், மும்பை அணியின் பந்து வீச்சின் வலிமை தான். இதுவரை மூன்று போட்டிகள் ஆடியுள்ள மும்பை அணி, மூன்றிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

விமர்சிக்கும் ரசிகர்கள்

அதிலும் குறிப்பாக, கொல்கத்தா அணிக்கு எதிராக ஓரளவுக்கு மும்பை அணி வெற்றி பெற வாய்ப்பு இருந்த போதும், கொல்கத்தா அணியின் ஆல் ரவுண்டர் பேட் கம்மின்ஸ், 14 பந்துகளில் அரை சதமடித்து மும்பையின் வெற்றியை பறித்துக் கொண்டார். அதே போல, தோல்விக்கு பின் பேசிய மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மாவும், கம்மின்ஸ் இப்படி ஆடுவார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்பதை சற்று விரக்தியுடன் தான் வெளிப்படுத்தி இருந்தார்.

மும்பை அணியின் நிலை

மும்பை அணியின் தொடர் தோல்வி குறித்து, ரசிகர்கள் பலரும் அதிகம் விமர்சனம் செய்திருந்தனர். அதே போல, கிரிக்கெட் பிரபலங்கள் சிலரும் அடுத்தடுத்த போட்டிகளில் மும்பை அணி என்னென்ன மாற்றங்களை செய்ய வேண்டும் என்பது பற்றியும் அறிவுரைகளை அளித்திருந்தனர். 2020 ஆம் ஆண்டு சாம்பியனாக இருந்த மும்பை, 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறி இருந்தது.

தொடர்ந்து, இந்த முறை அவர்கள் சந்தித்து வரும் தொடர் தோல்விகள், மும்பை அணி வீரர்களையும் சற்று ஏமாற்றம் அடைய செய்திருக்கும். இந்நிலையில், முன்னாள் இந்திய வீரர் சேவாக் மும்பை அணியை குறிப்பிட்டு, செய்திருந்த ட்வீட் ஒன்று, மும்பை ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தி இருந்தது.

ரோஹித்தை சீண்டிய சேவாக்?

கம்மின்ஸை பாராட்டிய சேவாக், மும்பை அணியை கிண்டல் செய்யும் வகையில் வட பாவ் என்ற வார்த்தையை தனது ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தார். இதனால், மும்பை கேப்டன் ரோஹித்தின் ரசிகர்கள் கடுப்பாகினர். காரணம், அவரை தான் 'வட பாவ்' என சேவாக் குறிப்பிடுவதாக கூறி அவர்கள் கொந்தளித்தனர். தொடர்ந்து சேவாக்கை விமர்சித்து அவர்கள் கருத்து கூறவே, இந்த ட்வீட் அதிகம் வைரலாகி இருந்தது.

விளக்கம் கொடுத்த சேவாக்

ரோஹித் ரசிகர்களை கடுப்பாக்க வைத்த தன்னுடைய ட்வீட் குறித்து, சேவாக் விளக்கம் ஒன்றையும் பின்னர் அளித்திருந்தார். இது பற்றி தன்னுடைய ட்வீட்டில், "வடபாவ் என நான் மும்பையை தான் குறிப்பிட்டேன். ரோஹித் ரசிகர்கள் சற்று சமாதானப்படுங்கள். உங்களின் பெரும்பாலான நபர்களை விட நான் ரோஹித்துடைய பேட்டிங்கின் தீவிர ரசிகன்" என குறிப்பிட்டுள்ளார்.

நடிகரின் மரணம்.. 24 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய முக்கிய புள்ளி.. வீட்டுக்குள்ள ஃபுல்லா பாட்டிலு.. கூடவே ரெண்டு பொண்ணுங்க வேற

CRICKET, MUMBAI INDIANS, SEHWAG, MI, VIRENDER SEHWAG, ROHIT SHARMA, MI VS KKR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்