“இது ரெண்டுல மட்டும் தேறிட்டா நிச்சயம் சான்ஸ் கிடைக்கும்”.. அர்ஜூன் டெண்டுல்கர் குறித்த கேள்வி.. MI கோச் கொடுத்த விளக்கம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சச்சினின் மகன் அர்ஜூன் டெண்டுல்கருக்கு நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் கூட வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து மும்பை அணியின் பயிற்சியாளர் விளக்கம் கொடுத்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | ‘தலையில் அடி’.. சில நொடி எதுவும் பேசல.. உடனே வெளியேறிய வீரர்.. லார்ட்ஸ் டெஸ்ட்டில் பரபரப்பு..!

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 15-வது ஐபிஎல் தொடரில் மும்பை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மொத்தம் 14 போட்டிகளில் விளையாடி 10 தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலில் 10-வது இடத்தை பிடித்தது. ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி, இந்த ஆண்டு ப்ளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேறாமல் வெளிறியது.

அதனால் மும்பை அணி மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. குறிப்பாக வீரர்களின் தேர்வு பெரிய விமர்சனத்துக்கு உள்ளானது. சீனியர் வீரர்களை தாண்டி இளம் வீரர்களுக்கு அதிகமாக வாய்ப்பு வழங்கப்படவில்லை என நெட்டிசன்கள் குற்றம்சாட்டினர். இதனை அடுத்து பல இளம் வீரர்களுக்கு மும்பை அணி வாய்ப்பு வழங்கியது.

ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகரும், இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவனான சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதுகுறித்து பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் சச்சின் அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறித்து மும்பை அணியின் பவுலிங் பயிற்சியாளர் ஷேன் பாண்ட் பேட்டி ஒன்றில் விளக்கம் கொடுத்துள்ளார்.

அதில், ‘அர்ஜுன் டெண்டுல்கர் அணியில் இல்லாதது குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. ஆனால் இன்னும் அவர் தனது பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் கடுமையாக உழைக்க வேண்டியது அவசியம். அந்த இரண்டு வகையிலும் அவர் தனது தரத்தை மேம்படுத்திக்கொண்ட பின்னர் நிச்சயம் அவருக்கு இனி வரும் தொடர்களில் வாய்ப்பு கிடைக்கும்’ என ஷேன் பாண்ட் கூறியுள்ளார்.

முன்னதாக சச்சினிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அணி தேர்வில் தான் தலையிடுவதில்லை என்றும், மும்பை அணி நிர்வாகத்துக்கும் எப்போது அர்ஜுனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என தெரியும் என்று சச்சின் பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | மாப்பிள்ளைக்கு 10 கண்டிஷன் போட்ட மணப்பெண்.. ‘அந்த 8-வது பாயிண்ட் வேறவெவல்’.. வைரலாகும் கல்யாண கட் அவுட்..!

CRICKET, MI COACH, SHANE BOND, ARJUN TENDULKAR, IPL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்