“கடைசியில தோனி என்ன பண்ணுவார்ன்னு தெரியும்”.. நொந்துபோன ரோகித்.. தோல்விக்கு பின் சொன்ன ‘அந்த’ பதில்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் தோல்வியடைந்தது குறித்து மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசியுள்ளார்.

Advertising
>
Advertising

ஐபிஎல் தொடரின் 33-வது லீக் போட்டியில் நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக திலக் வர்மா 51 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 32 ரன்களும் எடுத்தனர். சென்னை அணியை பொறுத்தவரை முகேஷ் சௌத்ரி 3 விக்கெட்டுகளும், பிராவோ 2 விக்கெட்டுகளும், மிட்சல் சாண்ட்னர் மற்றும் தீக்‌ஷணா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ராபின் உத்தப்பா களமிறங்கினர். அதில் ருதுராஜ் கெய்க்வாட், தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். இதனை அடுத்து களமிறங்கிய மிட்சல் சாண்ட்னர் உடன் ஜோடி சேர்ந்த ராபின் உத்தப்பா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்போது 11 ரன்களில் மிட்சல் சாண்ட்னர் அவுட்டாக, அதனைத் தொடர்ந்து 30 ரன்களில் ராபின் உத்தப்பாவும் வெளியேறினார்.

இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த அம்பத்தி ராயுடு மற்றும் சிவம் துபே கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதில் 13 ரன்களில் சிவம் துபே அவுட்டாக, அடுத்ததாக கேப்டன் ஜடேஜா களமிறங்கினார். ஆனால் 3 ரன்னில் அவுட்டாகி அவரும் அதிர்ச்சி அளித்தார். இவரை தொடர்ந்து அம்பத்தி ராயுடு (40 ரன்கள்) அவுட்டானார்.

இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த விக்கெட் கீப்பர் தோனி (28 ரன்கள்) மற்றும் டுவைன் பிரிட்டோரியஸ் (22 ரன்கள்) பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் கடைசி 1 பந்துக்கு 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சிஎஸ்கே அணி இருந்தது. அப்போது களத்தில் இருந்த தோனி பவுண்டரி விளாசி அணியை வெற்றி பெற வைத்தார்.

இந்த நிலையில் போட்டி முடிந்த பின் தோல்வி குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ‘இது ஒரு சிறந்த சண்டையாக இருந்தது. பந்துவீச்சாளர்கள் தான் ஆட்டத்தை முன்னோக்கி எடுத்துச் சென்றார்கள் என நினைக்கிறேன். ஆனால் கடைசியில் தோனி எவ்வளவு கூலாக விளையாடுவார் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். அவர் போட்டியை அவர்கள் பக்கம் முடித்துவிட்டார்’ என ரோகித் சர்மா கூறியுள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.

https://www.behindwoods.com/bgm8/

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்