முதல் மேட்சே தோல்வி.. இப்போ இது வேறையா.. வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியது போல் MI அணிக்கு வந்த தகவல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.

Advertising
>
Advertising

ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக இஷன் கிஷன் 81 ரன்களும், ரோகித் சர்மா 41 ரன்களும் எடுத்தனர். டெல்லி அணியை பொறுத்தவரை குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும், கலீல் அகமது 2 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த டெல்லி அணி 18.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது டெல்லி வெற்றி பெற்றது. இப்போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 10-வது முறையாக முதல் போட்டியில் தோல்வியடைந்த அணி என்ற மோசமான சாதனையை மும்பை அணி படைத்துள்ளது.

இந்த சூழலில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு, மெதுவாக பந்து வீசியதற்காக ஐபிஎல் நிர்வாகம் 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மேலும் இந்த தொடர்பில் இனி வரும் போட்டிகளில் இதுபோன்று மீண்டும் தவறு செய்யும் பட்சத்தில், ஒரு போட்டிக்கு தடை அல்லது அணியின் வெற்றி புள்ளியிலிருந்து 1 குறைக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே முதல் போட்டியில் தோல்வியடைந்து சோகத்தில் உள்ள மும்பை அணிக்கு, வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்