ரோகித் சர்மாவுக்கு சோதனை மேல் சோதனை.. ‘இதோட ரெண்டாவது தடவை’.. ஐபிஎல் நிர்வாகம் அதிரடி ஆக்‌ஷன்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "உங்க ஏரியா-ல மின்சாரம் துண்டிப்பா? இத மறக்காம செய்யுங்க".. அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி..!

ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி, பஞ்சாப் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான் 70 ரன்களும், மயங்க் அகர்வால் 52 ரன்களும் எடுத்தனர். அதேபோல் ஜித்தேஷ் சர்மா 15 பந்துகளில் 30 ரன்களும், ஷாருக்கான் 6 பந்துகளில் 15 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம், ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வியடைந்து மும்பை அணி மோசமான சாதனையை படைத்துள்ளது. அதனால் அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்றைய போட்டியில் கொடுக்கப்பட்ட நேரத்தை விட அதிகமாக நேரம் எடுத்து ஓவர்கள் வீசியதற்காக மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் ஐபிஎல் நிர்வாகம் 24 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மேலும் அந்த அணியின் வீரர்களுக்கு 6 லட்சம் ரூபாய் அல்லது அந்த போட்டிக்கான ஊதியத்தில் இருந்து 25 சதவீதம் அபராதமாக எடுக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் ஏற்கனவே முதல் போட்டியில் மெதுவாக ஓவர் வீசியத்திற்காக மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. ஐபிஎல் தொடரில் 2 முறை ஒரு அணிக்கு அபராதம் விதிக்கப்படுவது இதுவே முதல் முறை என சொல்லப்படுகிறது.

Also Read | ‘இப்படி பண்ணிட்டோமே’.. சோகமாக உட்கார்ந்த சூர்யகுமார்.. அப்போ பொல்லார்டு செய்த செயல்.. மனுசன் வேறலெவல்யா..!

CRICKET, IPL, IPL 2022, MI, ROHIT SHARMA, PBKS, MI VS PBKS, MUMBAI INDIANS, PUNJAB KINGS, ஐபிஎல், மும்பை இந்தியன்ஸ், ரோகித் சர்மா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்