கொஞ்சம் கூட 'இரக்கம்' இல்லையா...? என்னப்பா பவுலிங் இது...? 'கத்துக்கிட்ட மொத்த வித்தைய இறக்கிட்டாரு...' - நிலைகுலைந்து போன ராஜஸ்தான் பேட்ஸ்மேன்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரின் நேற்றைய (05-10-2021) ஆட்டத்தில் மோதிய மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இரண்டும் தங்கள் பந்துவீச்சு திறனை முழுஅளவில் உபயோகப்படுத்தியுள்ளனர்.
2021-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியின் பிளே ஆஃப் சுற்றுக்கு நுழைய கிரிக்கெட் அணிகள் போட்டி போட்டுக்கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் நேற்று துபாய் ஷார்ஜா மைதானத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் தங்களின் அபார பந்துவீச்சு திறனை நேற்றைய போட்டியில் முழுவதுமாக காட்டியது என்று தான் சொல்ல வேண்டும்.
மும்பை இந்தியன்ஸ் அட்டகாசமான பந்து வீச்சால் ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்களான லீவிஸ் மற்றும் ஜெய்ஸ்வால் 24 மற்றும் 12 ரன்களில் விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தனர்.
அவர்கள் மட்டுமல்லாது, அதைத் தொடர்ந்து களமிறங்கிய டேவிட் மில்லர் 15 ரன்களிலும் மற்றும் ராகுல் திவாடியா 12 ரன்களிலும் அவுட் ஆனார்கள். அதன்பின் வந்த அனைத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களும் ஒற்றை இலக்கங்களுடன் பெவிலியன் திரும்பினர்.
20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெறும் 90 ரன்களை மட்டுமே எடுத்தது. இதற்கு காரணம் மும்பை அணியின் துல்லியமான பந்து வீச்சுதான் என கிரிக்கெட் நெட்டிசன்கள் மும்பை அணியை புகழ்ந்து வருகின்றனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கவுட்டர் நைல் 4 ஓவரில் வெறும் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து ரன்கள் ஏறவிடாமல் பார்த்துக்கொண்டார். அதோடு, ராஜஸ்தான் அணியின் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அதே போல் ஜிம்மி நீஷம் பந்து வீசிய ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றியது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பக்கபலமாக இருந்தது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அடப்பாவிங்களா... அவுட் இல்லயா'?.. ரன் அவுட் ஆகியும் நாட் அவுட்டான டு ப்ளசிஸ்!.. மேட்ச்சின் நடுவே நடந்த ட்விஸ்ட்!!
- மீண்டும் 'BP'எ எகிற வெச்ச 'மேட்ச்'.."18 ஆவது ஓவர்ல நடந்த அந்த ஒரு 'விஷயத்தால' தான் மொத்தமா கை விட்டு போயிடுச்சு.." ஏங்கிப் போன 'சிஎஸ்கே' ரசிகர்கள்!!
- 'ஃபிட்னஸ நிரூபிச்சு ஆஸ்திரேலியா போயும்'... 'ரோஹித் சர்மாவுக்கு எழுந்துள்ள புது சிக்கல்?!!'... 'அப்போ எப்போதான் அவரு விளையாடுவாரு???'...
- 'கங்குலியின் பிளானுக்கு எழுந்த அடுத்தடுத்த சிக்கல்?!!'... 'மெகா Auction இருக்கா, இல்லையா???'... 'புது பிளான் போடும் பிசிசிஐ!!!'...
- 'என்னது?.. அடுத்த IPLல இத்தன டீமா???'... 'ஓ... இதுதான் கங்குலி பிளானா?!!'... 'எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ள பரபரப்பு தகவல்!!!'...
- 'டீம்ல இடம் கிடைச்சும் ஏன் இப்படி???'... 'எல்லாத்துக்குமே கோலியோட அந்த பிளான்தான் காரணமா?!!'... 'அப்போ அடுத்த போட்டி???'...
- 'அடுத்த சீசனிலேயே வரப்போகும் மிகப்பெரிய மாற்றம்???'... 'ஒன்று சேர்ந்து கேட்கும் அணிகள்?!!'... 'எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள தகவல்!!!'...
- 'மத்த டீம்ல Familyகே அனுமதி இல்லாதப்போ'... 'BCCIஐ மிரள செய்த அணி!!!'... 'லிஸ்ட்டுலயே இதுதான் உச்சகட்டம்!!!'... 'தொடருக்குப்பின் கசிந்த தகவல்!'...
- 'இதுக்கெல்லாம் பின்னாடி இத்தன பிளானிங்கா?!!'... 'கங்குலி எடுத்த அந்த ஒரு முடிவு!!!'... 'அடுத்தடுத்த அதிரடிகளால் வருமானத்தை குவித்து மலைக்க வைத்துள்ள BCCI!!!'...
- 'ஃபர்ஸ்ட்டு நான் எதுக்கு அத பண்ணனும்?!!'... 'சீண்டிய முன்னாள் வீரருக்கு'... 'ஹிட்மேன் கொடுத்த பதிலடி!!!'... 'ஆமா இவரு யார சொல்றாரு???'...