அர்ஜென்டினா கப் ஜெயிச்ச இரவில்.. ஸ்தம்பிச்சு போன இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்.. வரலாறு படைத்த மெஸ்ஸியின் பதிவு!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சமீபத்தில் நடந்து முடிந்த கால்பந்து உலக கோப்பைத் தொடரின் இறுதி போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி, அர்ஜென்டினா அணி 3 ஆவது முறையாக உலக கோப்பையை கைப்பற்றி இருந்தது.

Advertising
>
Advertising

உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ள விளையாட்டு கால்பந்து. இதன் உலக கோப்பை தொடர், கடந்த நவம்பர் மாதம் கத்தாரில் வைத்து ஆரம்பமாகி இருந்தது. அந்த நாள் முதல், இறுதி போட்டி நடந்து முடிந்த தினம் வரை உலக அளவில் கால்பந்து ரசிகர்கள் பரபரப்பாக தான் இருந்தனர்.

இதற்கு மத்தியில், அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் ஆகிய அணிகளும் இறுதி போட்டியில் தகுதி பெற்றிருந்தன. பலம் வாய்ந்த இரு அணிகள் மோதி இருந்ததால், ஒட்டுமொத்த உலகமே இந்த இறுதி போட்டியை உற்று நோக்கிக் கொண்டிருந்தது.

அது மட்டுமில்லாமல், அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரரும், கால்பந்து உலகின் ஜாம்பவானாகவும் கருதப்படும் லியோனல் மெஸ்ஸி, கால்பந்து உலகில் பல சாதனைகளை படைத்துள்ளார். ஆனால், உலக கோப்பையை வெல்வது மட்டும் எட்டாக்கனியாக இருந்து வந்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு உலக கோப்பைத் தொடரில் அதிக கோல்களை மெஸ்ஸி அடித்திருந்த போதும் அர்ஜென்டினா அணி தோல்வி அடைந்திருந்தது அவரை வேதனையில் ஆழ்த்தி இருந்தது.

இதன் பின்னர், தற்போது நடந்து முடிந்த கால்பந்து உலக கோப்பைத் தொடரில் அர்ஜென்டினா அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தததால் மெஸ்ஸிக்காக அந்த அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்றும் கால்பந்து பற்றி தெரியாதவர்கள் கூட அன்று இரவு பேசிக் கொண்டிருந்தனர். இப்படி பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்த கால்பந்து உலக கோப்பை இறுதி போட்டியில், பெனால்டி ஷூட் அவுட்டில் அர்ஜென்டினா அணி 4 - 2 என்ற கணக்கில் வென்றதுடன், 36 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையையும் கைப்பற்றி உள்ளது.

அர்ஜென்டினா அணி மற்றும் மெஸ்ஸியை தற்போது வரை ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பாராட்டி வரும் சூழலில், தொடர்ந்து கால்பந்து குறித்த விஷயம் தான் சோஷியல் மீடியாவில் அதிகம் வைரலாகியும் வருகிறது. இந்த நிலையில், பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டாவின் நிறுவனர் மற்றும் தலைமை அதிகாரி  மார்க் ஸக்கர்பெர்க் பகிர்ந்துள்ள விஷயம் கால்பந்து ரசிகர்கள் மத்தியில், அதிக கவனம் பெற்று வருகிறது.

அவர் பகிர்ந்துள்ள பேஸ்புக் பதிவில், "லியோனல் மெஸ்ஸியின் உலக கோப்பை பதிவு தான் இன்ஸ்டாகிராம் வரலாற்றில் அதிக லைக்குகளை பெற்ற பதிவு. இறுதி போட்டியின் போது, வாட்ஸ்அப்பிலும் ஒரு நொடிக்கு 25 மில்லியன் மெசேஜ்கள் வீதம் பெறப்பட்டு சாதனை புரிந்துள்ளது" என மார்க் ஸக்கர்பெக் குறிப்பிட்டுள்ளார்.

கால்பந்து உலக கோப்பை இறுதி போட்டியின் போது, இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் செயலிகள் ஸ்தம்பித்து போனது தொடர்பாக நிறுவனர் மார்க் ஸக்கர்பெக் பகிர்ந்த பதிவு, பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

முன்னதாக, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை கூட கால்பந்து உலக கோப்பை இறுதி போட்டி பற்றி பகிர்ந்த ட்வீட்டில், கூகுள் தொடங்கப்பட்ட 25 ஆண்டுகளில், அதிக டிராபிக் வந்தது கால்பந்து உலக கோப்பை இறுதி போட்டி நடந்த போது தான் என்றும் ஒட்டுமொத்த உலகமே ஒரு விஷயத்தை மட்டும் தேடியது போல இருந்தது என்றும் தனது ட்வீட்டில் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ARGENTINA, MESSI, FIFA WORLD CUP 2022

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்