VIDEO: ‘நெய்மரை கட்டிப்பிடிச்சு ஆறுதல் சொன்ன மெஸ்ஸி’!.. அந்த வீடியோவுல இதை யாராவது ‘நோட்’ பண்ணீங்களா?.. ‘செம’ வைரல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கோபா அமெரிக்க கால்பந்தாட்ட தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றதும் அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி, பிரேசில் வீரர் நெய்மரை கட்டியணைத்து ஆறுதல் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கான 47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி (Copa America 2021) பிரேசிலில் நடைபெற்றது. அதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பிரேசிலை (Brazil) 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜெண்டினா (Argentina) கோப்பையை வென்றது.

கடந்த 1993-க்கு பிறகு கோபா அமெரிக்கா கோப்பையை வெல்லாத அர்ஜெண்டினாவை தங்களது சொந்த மண்ணில் பிரேசில் சந்தித்தது. இதனால் பிரேசில் அணியே வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டது. ஆனால் அர்ஜெண்டினாவின் ஏஞ்சல் டி மரியா (Angel Di Maria) அதனை மாற்றி அமைத்தார். ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் அவர் அடித்த கோல் அர்ஜெண்டினாவின் வெற்றிக்கு வழிவகுத்தது.

ஏஞ்சல் டி மரியாவின் கோல் அடித்த பிறகு ஆட்டத்தில் எந்தவொரு கோலும் வரவில்லை. அதனால் 1-0 என்ற கணக்கில் அர்ஜெண்டினா அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் கோபா அமெரிக்க கோப்பையை 28 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜெண்டினா அணி கைப்பற்றியுள்ளது. குறிப்பாக மெஸ்ஸி (Messi) தலைமையில் அர்ஜெண்டீனா வெல்லும் முதல் பெரிய கோப்பை இதுதான்.

மெஸ்ஸி, தனது நாட்டிற்காக இதுவரை எந்த ஒரு முக்கிய கோப்பையையும் பெற்று தரவில்லை என்ற விமர்சனங்கள் அவர் மீது வைக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது கோபா அமெரிக்க தொடரின் கோப்பையை அவர் வென்றிருப்பது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

இந்த நிலையில் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்ததும், பிரேசில் அணியின் கேப்டன் நெய்மர் (Neymar) கண்ணீர் விட்டு அழுதார். அப்போது நெய்மரிடம் வேகமாக சென்ற மெஸ்ஸி, அவரை கட்டியணைத்து ஆறுதல் கூறினார். அந்த சமயம், கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் உற்சாகமாக கொண்டாடிக் கொண்டிருந்த சக வீரர் ஒருவர் நெய்மர் மீது மோதுவதுபோல் வந்தார். உடனே அவரை தனது கையால் மெஸ்ஸி தடுத்தார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்