மேட்ச் தோத்தும் பஞ்சாப் கேப்டன் செய்த 'விஷயம்'.. "நீ தான் யா பெஸ்ட் கேப்டன்".. உருகி போன ரசிகர்கள்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

15 ஆவது ஐபிஎல் தொடரில், நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி பெற்றிருந்த த்ரில் வெற்றி, இந்த தொடரின் விறுவிறுப்பான போட்டியாக மாறியுள்ளது.

Advertising
>
Advertising

தற்போதைய ஐபிஎல் தொடரின் புதிய அணிகளில் ஒன்றான குஜராத் டைட்டன்ஸ் அணியை ஹர்திக் பாண்டியா தலைமை தாங்கி வருகிறார்.

நேற்று (08.04.2022) நடைபெற்றிருந்த போட்டியில், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை குஜராத் அணி எதிர்கொண்டிருந்தது.

இளம் வீரர் சுப்மன் கில்

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் 64 ரன்கள் எடுத்திருந்தார். தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணியில் இளம் வீரர் சுப்மன் கில், மிகவும் அதிரடியாக ஆடி ரன் சேர்த்துக் கொண்டிருந்தார்.

ராகுல் டெவாட்டியா செய்த அற்புதம்

இன்னொரு பக்கம், தேவைப்படும் ரன் ரேட் அதிகமாக இருக்க, குஜராத் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. இதனால், போட்டியில் பரபரப்பு தொற்றிக் கொள்ள, கடைசி ஓவரை ஓடேன் ஸ்மித் வீசினார். முதல் நான்கு பந்துகளில், 7 ரன்கள் மட்டுமே சேர்க்க, கடைசி இரண்டு பந்துகளில் குஜராத் அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது.

இரண்டு பந்துகளையும் சிக்சருக்கு அனுப்ப வேண்டும் என்ற நிலையில், அதனை எதிர்கொண்ட ராகுல் டெவாட்டியா, அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்க விட, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆச்சரியத்தில் உறைந்து போயினர். மேலும், இதுவரை குஜராத் அணி ஆடியுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றியை பதிவு செய்துள்ளது.

கேப்டனின் செயல்பாடு

தொடர்ந்து, குஜராத் அணி வீரர்கள் டெவாட்டியாவை கட்டித் தழுவி கொண்டாட, ஓடேன் ஸ்மித் அதிர்ச்சியில் மனம் கலங்கினார். அது மட்டுமில்லாமல், மைதானத்திற்குள் அப்படியே உட்கார்ந்து கொள்ள, அவர் அருகே வந்த கேப்டன் மயங்க் அகர்வால் அவரைத் தேற்றினார். தொடர்ந்து, போட்டிக்கு பின்னர் தங்களின் தோல்வி பற்றி பேசிய மயங்க் அகர்வால், "இது மிகவும் கடினமான போட்டி தான். நாங்களும் சிறந்த முறையில் சண்டை போட்டோம். சில விக்கெட்டுகள் வீழ்ந்த பிறகும், கடைசியில் நன்றாக ஆடி ரன்கள் சேர்த்தோம். பந்து வீச்சின் போதும் ரபாடா மற்றும் அர்ஷ்தீப் சிங் நன்றாக செயல்பட்டனர்.

அவருக்கு ஃபுல் சப்போர்ட்

கடைசி ஓவர் என்பது யாருக்கு வேண்டுமானாலும் சாத்தகமாக இருக்கலாம். நாங்கள் ஓடேனை முழுமையாக ஆதரிக்கிறோம். அவருக்கு மிகவும் கடினமான நாளாக இது அமைந்து விட்டது. இருந்தாலும் பரவாயில்லை. இது கிரிக்கெட் விளையாட்டு தான்" என ஓடேனுக்கு முழு ஆதரவையும் கேப்டன் மயங்க் அகர்வால் அளித்து பேசினார்.

பாராட்டினை பெற்றிருந்த மயங்க்

முன்னதாக, பெங்களூர் அணிக்கு எதிராக பஞ்சாப் அணி மோதிய போட்டியில், இளம் வீரர் ராஜ் பவா அறிமுக ஐபிஎல் போட்டியில் களமிறங்கி இருந்தார். இதில், முதல் பந்திலேயே அவுட்டாகி வெளியே வந்த அவரை, கேப்டன் மயங்க் அகர்வால் தலையில் தட்டித் தேற்றி பாராட்டி இருந்த செயலும், ரசிகர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பினை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

MAYANK AGARWAL, ODEAN SMITH, IPL 2022, PBKS VS GT, RAHUL TEWATIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்