"அவரோட 'கேப்டன்சி'ல ஆடுறது தான் ஆச... அந்த 'ஐபிஎல்' டீம் தான் என்னோட 'டார்கெட்'..." மனம் திறந்த 'மேக்ஸ்வெல்'... 'இது வேற லெவல் 'Combo' ஆச்சே'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தாண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம், நாளை மறுநாள் (பிப்ரவரி 18) சென்னையில் வைத்து நடைபெறவுள்ள நிலையில், 8 ஐபிஎல் அணிகளும் இதற்காக தயாராகி வருகின்றன.

முன்னதாக, அனைத்து அணிகளும் எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்ளப் போகிறார்கள் என்பது பற்றியும், எந்தெந்த வீரர்களை வெளியேற்ற போகிறார்கள் என்பது பற்றியுமான பட்டியலை வெளியிட்டிருந்தது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, அதிரடி வீரர் மேக்ஸ்வெல்லை வெளியேற்றியது. கடந்த சீசனில், 11 போட்டிகளில் களமிறங்கிய அவர், 108 ரன்களே எடுத்தார்.

அது மட்டுமில்லாமல், இவரது பேட்டிங் கடும் விமர்சனத்துக்குள் ஆகியிருந்தது. ஆனால், கடந்த ஐபிஎல் சீசனுக்கு பிறகு இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரில் அவர் அதிரடி காட்டியிருந்தார். இதனால், தற்போது நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலத்தில் நிச்சயம் இவரை எடுப்பதில் பல அணிகள் போட்டி போடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய மேக்ஸ்வெல், 'எனக்கு ஆர்சிபி (பெங்களூர்) அணியில் இடம்பெற வேண்டும் என்ற ஆசையுள்ளது. குறிப்பாக, பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலியுடன் இணைந்து ஆட வேண்டும். அவரது பேட்டிங் எனக்கு மிகவும் பிடிக்கும்.


இதனால், அவருடன் இணைந்து ஆடுவது எனக்கு உதவியாக இருக்கும். எனவே, பெங்களூர் அணியில் இந்த முறை நான் இடம்பெற விரும்புகிறேன்' என மேக்ஸ்வெல் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்