கடும் ஆத்திரத்தில் ஹெல்மெட்டை தூக்கி வீசி.. பேட்டை கீழே அடித்த மேத்யூ வேட்.. மைதானத்தில் பரபரப்பு.. வைரலாகும் வீடியோ!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நடப்பு ஐபிஎல் தொடர், ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "எது, இனிமே மும்பை இந்தியன்ஸ்-க்கு சப்போர்ட்டா??.." கோலி பகிர்ந்த விஷயம்.. கூடவே டு பிளெஸ்ஸிஸ் ஒண்ணு பண்ணாரு பாருங்க.. வைரல் வீடியோ

மீதமுள்ள இரண்டு இடங்களில் எந்த அணிகள் தகுதி பெறும் என்பது, மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே நாளை (21.05.2022) நடைபெறவுள்ள போட்டி முடிந்தால் தான் தெரியும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று சென்னை அணியுடன் தோல்வி அடைந்தாலும், நல்ல ரன் ரேட்டை தக்க வைத்துக் கொண்டாலே, பிளே ஆப் சுற்று அவர்களுக்கு உறுதி தான்.

ஆர்சிபிக்கு வாய்ப்பு எப்படி?

மறுபக்கம், மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதும் போட்டியில், மும்பை வென்றால் பெங்களூர் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இல்லையெனில், டெல்லி அணி வென்று பிளே சுற்றுக்கு முன்னேறும். இதனால், 4 ஆவது அணியை தீர்மானிக்கும் போட்டியாகவும் அது இருக்கும் என கருதப்படுகிறது. இதனிடையே, குஜராத் அணிக்கு எதிரான தங்களின் கடைசி லீக் போட்டியில், பெங்களூர் அணி வெற்றி பெற்றதும் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.

முதலில் பேட்டிங் செய்த குஜராத், 168 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தொடர்ந்து ஆடிய பெங்களூர் அணி, 19 ஆவது ஓவரில் இலக்கை எட்டிப் பிடித்தது. நடப்பு ஐபிஎல் தொடரில், பெரிய அளவில் ஃபார்மில் இல்லாமல் இருந்த கோலி, சிறப்பாக ஆடி 73 ரன்கள் எடுத்திருந்தார். இதனால், பிளே ஆப் வாய்ப்பையும், பெங்களூர் அணி தக்க வைத்துக் கொண்டது.

சர்ச்சை சம்பவம்

இதனிடையே, குஜராத் மற்றும் பெங்களூர் அணி மோதி இருந்த போட்டியில் நடந்த சம்பவம் ஒன்று, பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, 6 ஆவது ஓவரை மேக்ஸ்வெல் வீசினார். இந்த ஓவரில் பந்தினை மேத்யூ வேட் எதிர்கொண்டு ஸ்வீப் ஷாட் அடிக்க பார்க்க, பேடில் பட்டது. இதனால், ஆர்சிபி வீரர்கள் அவுட்டிற்கு அப்பீல் செய்ய, நடுவரும் எல்பிடபுள்யூ அவுட் என அறிவித்தார்.

கடும் ஆத்திரத்தில் மேத்யூ வேட்

தொடர்ந்து, DRS முறையில் வேடு அப்பீல் செய்ய, அதிலும் அவர் அவுட் என அறிவிக்கப்பட்டது. இன்னொரு பக்கம், அவர் அவுட்டில்லாதது போல தெரிந்ததாகவும் கூறப்படுகிறது. DRS முறையிலும் அவுட் என வந்ததால் கடும் ஆத்திரத்தில் இருந்தார் மேத்யூ வேட். அதன்படி, மைதானத்தில் கத்திய படி கடந்து சென்ற அவர், டிரெஸ்ஸிங் ரூம் திரும்பிய பிறகு, ஆக்ரோஷத்தில் ஹெல்மெட்டை தூக்கி வீசி, பேட்டையும் வேகமாக கீழே போட்டு அடித்தார்.

இது தொடர்பான வீடியோக்கள், சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், கிரிக்கெட் ரசிகர்களும் இது தொடர்பான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

 

CRICKET, MATTHEW WADE, MATTHEW WADE THROWS HELMET, மேத்யூ வேட்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்