பிரபல ஆஸ்திரேலிய வீரருக்கு கொரோனா.. "ஆனாலும் அடுத்த மேட்ச் விளையாட முடியும்?".. புது விதிகள் சொல்வது என்ன?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது தொடர்பான செய்தி, தற்போது கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "ரிஷி சுனக் Kidnap.. நெஹ்ராவ அனுப்பிடலாம்".. பிரபல தொழிலதிபரின் நண்பர் போட்ட 'ஜாலி' பிளான்??..😀

8 வது டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் வைத்து மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.

முதல் சுற்றில் இருந்து இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேற்றம் கண்டிருந்தது.

மொத்தமுள்ள 12 அணிகள், இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அரை இறுதி சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் ஒவ்வொரு போட்டியும் முக்கியம் என்பதால் அனைத்து அணிகளும் ஒவ்வொரு போட்டியிலும் தீவிரமாக ஆடி வருகின்றனர்.

இதில், ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, குரூப் 1-ல் இடம்பெற்றுள்ளது. இதுவரை இரண்டு போட்டிகளில் ஆடி உள்ள ஆஸ்திரேலிய அணி, முதல் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தோல்வி அடைந்திருந்தது. இதனைத் தொடர்ந்து, இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றிருந்தது.

இதையடுத்து, நாளை (28.10.2022) நடைபெற உள்ள போட்டியில், இங்கிலாந்து அணியை சந்திக்க உள்ளது ஆஸ்திரேலிய அணி. அரை இறுதி சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பது இரு அணிகளுக்கும் முக்கியம் வாய்ந்ததாகும். இதனிடையே, ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான மேத்யூ வேட், கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முன்னதாக, ஆஸ்திரேலிய வீரரான ஆடம் ஸ்ம்பாவும் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து தற்போது மேத்யூ வேடிற்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. ஆனால், டி 20 உலக கோப்பை தொடரின் விதிப்படி கொரோனா மூலம் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு அறிகுறி லேசாக இருந்தால் அவர்கள் விளையாடலாம் என்றும் விதி கூறுகிறது. அதே நிலையில், மேத்யூ வேட் இருந்தால் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதே வேளையில், விக்கெட் கீப்பரான மேத்யூ வேட் ஆடாமல் போனால் ஒரு வேளை அவருக்கு பதிலாக மேக்ஸ்வெல் கீப்பராக செயல்படுவார் என்றும் தெரிகிறது. இதற்கு காரணம், மேக்ஸ்வெல் கீப்பிங் பயிற்சியில் தற்போது ஈடுபட்டு வருவது தான். இதனால், நாளைய போட்டியில் யார் களமிறங்குவார்கள் என்பதை அறிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

Also Read | Ind Vs Ned : விறுவிறுப்பான போட்டிக்கு நடுவே காதல் Propose.. "அவங்க ஓகே சொன்னாங்களா இல்லையா?".. வைரல் வீடியோ!!

CRICKET, MATTHEW WADE, MATTHEW WADE TESTS POSITIVE, COVID 19, AUSTRALIAN WICKETKEEPER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்