கேட்ச் பிடிக்க வந்த பவுலரை தடுத்த மேத்யூ வேட்..?.. கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சை - வீடியோ!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவில் வைத்து டி 20 உலக கோப்பைத் தொடர் விரைவில் தொடங்க உள்ளதால் அனைத்து அணிகளும் தற்போதில் இருந்தே தீவிரமாக தயாராகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | பாட்டியை கொலை செய்து விட்டு.. 4 மாசமா வீட்டில் வைத்திருந்த இளைஞர்.. அம்மா வேற சப்போர்ட்.. 5 வருசம் கழிச்சு தெரிஞ்ச பின்னணி!!

அதே போல, ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியும் சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்றிருந்தது.

மறுபக்கம், டி 20 உலக கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, டி 20 தொடரில் ஆடி வருகிறது.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள், நேற்று (09.10.2022) மோதி இருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்திருந்த இங்கிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர்களான ஜோஸ் பட்லர் 68 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 84 ரன்களும் எடுத்திருந்தனர்.

தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தார். அவர் 73 ரன்கள் சேர்த்து அவுட்டான நிலையில், கடைசி கட்டத்தில் ரன் சேர்க்க ஆஸ்திரேலிய அணி தவறியதால், 20 ஓவர்கள் முடிவில் 200 ரன்கள் மட்டுமே அவர்களால் எடுக்க முடிந்தது. இதனால், 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இதனிடையே, போட்டிக்கு மத்தியில் நடந்த சம்பவம் ஒன்று கிரிக்கெட் வட்டாரத்தில் கடும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது 17 ஆவது ஓவரை மார்க் வுட் வீசினார். அப்போது, அந்த ஓவரின் மூன்றாவது பந்தை மேத்யூ வேட் எதிர்கொண்டார். அப்போது அவரது பேட்டில் பட்டு பந்து எட்ஜ் ஆக, இதனை கேட்சாக மாற்ற மார்க் வுட் முயன்றுள்ளார். அந்த சமயத்தில் ரன் ஓட முயன்ற வேட், மீண்டும் கிரீஸுக்கு திரும்பும் போது கேட்ச் எடுக்க வந்த மார்க்கை கைகொண்டு தடுத்து நிறுத்தி உள்ளார்.

இதனால், கேட்ச் வாய்ப்பு பறிபோன நிலையில், வேட் செயலால் இங்கிலாந்து வீரர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இது தொடர்பான வீடியோக்கள் கூட கிரிக்கெட் பிரபலங்கள் மத்தியில் சலசலப்பை உண்டு பண்ணி உள்ளது. மேலும், வேட் வேண்டுமென்றே இதை செய்ததாகவும் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர். கிரிக்கெட் விதிகளை மீறிய செயலாகவும் இது பார்க்கப்படுகிறது.

 

Also Read | ஒரே லைனில் தோனி சொன்ன விஷயம்.. வேற லெவல் உற்சாகத்தில் CSK ரசிகர்கள்!!..

CRICKET, MATTHEW WADE, MARK WOOD, AUSTRALIA VS ENGLAND

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்