'தப்பு செஞ்சா இது தான் நடக்கும்'... 'இளம் வீரரின் கிரிக்கெட் வாழ்க்கையை சூனியமாக்கிய மேட்ச் பிக்சிங்'... அதிரடி காட்டிய ஐசிசி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்ட இரண்டு வீரர்களுக்கு 8 ஆண்டுகள் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.

கிரிக்கெட் விளையாட்டைப் பொறுத்தவரை சர்வதேச போட்டியில் பங்கேற்று தனது திறமையை நிரூபித்து விட்டாலே அந்த வீரரின் கிரிக்கெட் வாழ்க்கை மட்டுமல்லாது தனிப்பட்ட வாழ்க்கையும் பொருளாதார ரீதியில் அடுத்த கட்டத்திற்குச் சென்று விடும்.

அதே நேரத்தில்  வளர்ந்து வரும் சில கிரிக்கெட் வீரர்கள் சிக்கிக்கொள்வது மேட்ச் பிக்சிங் என்ற புதை குழியில் தான். ஒருமுறை அதில் சிக்கி தடை பெற்று விட்டால் கிட்டத்தட்ட அந்த வீரரின் கிரிக்கெட் வாழ்க்கையே சூனியமாகிவிடும். அந்த வகையில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்ட அமீரக கிரக்கெட் வீரர்கள் இருவருக்கு, எட்டு ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.

ஐக்கிய அமீரக அணியின் வீரர்கள் முகமது நவீத் மற்றும் ஷைமான் அன்வர் ஆகிய இருவரும் இந்த தடைக்கு ஆளாகியுள்ளனர். அமீரகத்தில் 2019 வாக்கில் நடைபெற்ற டி20  உலகக்கோப்பை குவாலிபையர் போட்டியின்போது அவர்கள் இருவரும் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட முயன்றுள்ளனர்.

அது குற்றச்சாட்டாக அப்போது பெரும் சர்ச்சையானது. தொடர்ந்து அவர்களது குற்றம் நிரூபிக்கப்பட்ட காரணத்தினால் தற்போது தடைக்கு ஆளாகியுள்ளனர். முகமது நவீத் அமீரக அணியின் முன்னாள் கேப்டன். தன் நாட்டுக்காக 39 ஒருநாள் மற்றும் 31, டி20 போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். மற்றொரு வீரர் அன்வர் பேட்ஸ்மேன் ஆவார். தற்போது 8 ஆண்டுகள் தடை பெற்று, கிரிக்கெட் வாழ்க்கை அஸ்தமனமாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

இந்த தடை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐசிசியின் அலெக்ஸ் மார்ஷல்,  ''தவறான பாதையில் போகும் கிரிக்கெட் வீரர்களுக்கு இந்த தடை நடவடிக்கை தக்கதொரு பாடாமக இருக்கும்'' எனத் தெரிவித்துள்ளார் .

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்