‘கடைசி நேரத்துல வந்து ஏன் அப்படி சொன்னீங்க?’.. ‘தயவுசெஞ்சு விளக்கம் கொடுங்க’.. மேரி கோம் பரபரப்பு ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கால்இறுதிக்கு முந்தைய போட்டியில் தோல்வியடைந்தது தொடர்பாக ஒலிம்பிக் கமிட்டி மீது இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை மேரி கோம், கொலம்பியாவின் இன்கிரிட் வலென்சியாவை சந்தித்தார். ஆனால் அனுபவம் வாய்ந்த மேரி கோமுக்கு, ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றவரான வலென்சியா கடும் சவால் அளித்தார்.

முதல் ரவுண்டில் வலென்சியா தாக்குதல் தொடுப்பதில் வெற்றி கண்டு நடுவர்களின் கவனத்தை ஈர்த்து முன்னிலை வகித்தார். அதனால் அடுத்த ரவுண்டில் மேரி கோம் தனது வியூகத்தை மாற்றி ஆக்ரோஷமாக எதிராளிக்கு குத்துகளை விட்டார். இதனை அடுத்து கடைசி ரவுண்டில் இருவரும் சரமாரியாக குத்துகளை பரிமாறினார்கள். ஆனால் வலென்சியா 3-2 என்ற கணக்கில் மேரி கோமை வீழ்த்தியதாக நடுவர்கள் அறிவித்தனர்.

இதனால் அதிருப்தி அடைந்த மேரி கோம், நடுவர்கள் ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக குற்றம்சாட்டினார். இதனைத் தொடர்ந்து ஒலிம்பிக் தூதர் பொறுப்பையையும் ராஜினாமா செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் ஒலிம்பிக் கமிட்டி மீது சரமாரியாக கேள்வி எழுப்பி மேரி கோம் ட்வீட் செய்துள்ளார். அதில், ‘கால்இறுதியின் முந்தைய போட்டியில் விளையாடுவதற்கு முன், நான் அணிந்திருந்த ஜெர்சியை திடீரென மாற்றுமாறு தெரிவித்தனர். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏன் அவ்வாறு கூறினார்கள் என்பது குறித்து விளக்கம் வேண்டும்’ என மேரி கோம் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக, மேரி கோம்தான் வெற்றியாளர் என்றும், நடுவர்களின் புள்ளி கணக்கிடும் முறை வருத்தம் அளிப்பதாகவும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்