அடேங்கப்பா! 1,2,3 இல்ல... 'மொத்தமா' 106 இடங்கள் 'ஜம்ப்' செஞ்சு ... 4-வது 'எடம்புடிச்ச' இளம்வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

2019-ம் ஆண்டின் ஆரம்பத்தில் டெஸ்ட் தரவரிசையில்  110-வது இடத்தில் இருந்த இளம்வீரர் வருடம் முடியும்போது 4-வது இடம்பிடித்த அதிசயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் நிகழ்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த மார்னஸ் லாபுஷேன்(25) தான் அந்த வீரர்.

டெஸ்ட் கிரிக்கெட்டின் ராஜா என்று புகழப்படும் ஸ்டீவ் ஸ்மித்திற்கு பதிலாக களமிறங்கிய லாபுஷேன், குறைந்த இடைவெளியில் ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார். இந்த வருடம் மொத்தமாக 11 போட்டிகளில் விளையாடி  3 சதம், 7 அரைசதங்களுடன் 1104 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரது சராசரி 65 ஆக உள்ளது.

வேகமான ஆடுகளங்கள், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் என இரண்டிலும் சமமாக பேலன்ஸ் செய்து அடித்து நொறுக்கும் லாபுஷேன் இந்த ஆண்டு தொடக்கத்தில் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் 110-வது இடத்தில் இருந்தார். இன்றுடன் இந்த வருடம் முடிவுக்கு வரும் நேரத்தில், ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் 4-வது இடம்பிடித்து கிரிக்கெட் வட்டாரத்தில் பலரின் புருவத்தையும் உயர வைத்துள்ளார்.

லாபுஷேன் போன்றவர்களின் வருகையால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி மீண்டும் ஆதிக்கம் செலுத்த தொடங்கி இருக்கிறது. தன்னுடைய அசத்தல் ஆட்டத்தால் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும், இந்த இளம்வீரர் இடம்பிடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்