"அந்த பயம் எனக்கு பிடிச்சிருக்கு".. அஸ்வினுக்கு பயந்து நம்பர் ஒன் பேட்ஸ்மேன் செய்த செயல்..😅 ரசிகர்களின் வைரல் பஞ்ச்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரிலும், 3 ஒரு நாள் போட்டி தொடரிலும் இந்திய அணியை எதிர்கொள்கிறது.

Advertising
>
Advertising

                              Images are subject to © copyright to their respective owners.

Also Read | "ஷமியா இப்டி ஒரு பால் போட்டது?".. ஒரு நிமிஷம் குழம்பி நின்ன கோலி, புஜாரா... என்ன நடந்துச்சு?

அந்த வகையில் இரு அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூர் விதர்பா மைதானத்தில் நடைபெற்றது. இதில்  இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்திய அணி வீரர்களின் சுழற்பந்து வீச்சு ஆஸ்திரேலிய அணிக்கு கடும் சவாலாக இருந்தது.  இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று வெள்ளிக்கிழமை துவங்கி இருக்கிறது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில், தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் மிகவும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். அணியின் ஸ்கோர் ஐம்பது ரன்களை தொட்ட போது டேவிட் வார்னர் 15 ரன்களில் ஷமி பந்து வீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஷேன் ஆட வந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

இன்னிங்ஸின் 19-வது ஓவரில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், உஸ்மான் கவாஜாவுக்கு பந்து வீச வரும் போது பந்தை வீசாமல் களத்தில் நின்றுவிட்டார். அப்போது நான்-ஸ்டிரைக்கர் பகுதியில் நின்ற மார்னஸ் கிரீசை விட்டு வெளியேறினார். அஸ்வின் பந்துவீசாமல் இருப்பதை உணர்ந்த மார்னஸ் ஒரு நொடி பொழுதில் மான்கட் முறையில் ஆட்டமிழப்பதை தவிர்க்க  பயந்து மீண்டும் கிரீஸ்க்குள் வந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த சம்பவத்தின் காரணமாக மார்னஸ், அஸ்வின் பந்து வீசும் போது நான் - ஸ்டிரைக்கர் பகுதியில் உள்ள ஸ்டெம்புக்கு பின்னால் சென்று நின்றுவிட்டார்.

இதை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் "Yeh Darr Accha Hai" என டிவிட்டரில் பதிவிட்டு Ashwin Anna & Ashwin பெயர்களை இந்திய அளவில் டிவிட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர். "Yeh Darr Accha Hai" என்றால் "அந்த பயம் எனக்கு பிடிச்சிருக்கு" என அர்த்தமாகும்.

Also Read | ஒரு நொடில பறந்து வந்து ஒத்த கையில கேட்ச் பிடிச்ச KL ராகுல்.. எங்கே இருந்துயா வந்தாரு?.. மிரண்டு போன ஆஸ்திரேலிய வீரர்! டிரெண்டிங் வீடியோ

CRICKET, MARNUS LABUSCHAGNE, RAVICHANDRAN ASHWIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்