‘யாரும் பயப்பட வேண்டாம், அவருக்கு ஒன்னுமில்லை’.. வெளியான மெடிகல் ரிஸல்ட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து வீரர் மார்க் உட் காயம் தொடர்பான ஸ்கேன் பரிசோதனை வெளியாகியுள்ளது.

வரும் 30 தேதியில் இருந்து ஒருநாள் போட்டிகான உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்து நாட்டில் தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக அனைத்து கிரிக்கெட் அணிகளும் ஒவ்வொரு அணியுடான பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இந்த வருடம் உலகக்கோப்பை இங்கிலாந்தில் நடைபெறுவதால் அந்நாட்டு அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக முன்னணி வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

அதை நிரூபிக்கும் வகையில் பாகிஸ்தான் அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி அனைத்து போட்டியிலும் 300 ரன்களுக்கு மேல் அடித்து பாகிஸ்தானை ஒய்ட் வாஸ் செய்தது. மேலும் சமீபத்தில் உலகக்கோப்பையில் விளையாட உள்ள இங்கிலாந்து வீரர்களின் இறுதிப்பட்டியலை சில முக்கிய மாற்றங்களுடன் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது.

இந்நிலையில் இங்கிலாந்து அணி வீரரான மார்க் உட் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். அப்போது அவருக்கு பதிலாக ஆர்சர் களமிறங்கினார். இதனை அடுத்து மார்கனின் கணுக்காலை ஸ்கேன் எடுத்த பார்த்ததில் காயம் ஏதும் ஏற்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனால் மார்கன் மீண்டும் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ICCWORLDCUP2019, MARK WOOD, ENGLAND

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்