இந்தவாட்டி 'கப்ப' தூக்கிரலாம் போல... 79 பந்தில் 147 ரன்கள்... 'தெறிக்க' விட்ட டெல்லி வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பிக்பாஷ் டி20 லீக் ஆட்டத்தில் இன்று மெல்போர்ன் ஸ்டார்ஸ்- சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து மெல்போர்ன் அணியின் துவக்கி ஆட்டக்காரர்களாக மார்கஸ் ஸ்டோய்னிஸ்-கார்ட்ரைட் இருவரும் களமிறங்கினர்.

36 பந்தில் அரைசதம் அடித்த ஸ்டோய்னிஸ் அதற்குப்பின் ருத்ரதாண்டவம் ஆடினார். 60 பந்தில் சதமடித்த ஸ்டோய்னிஸ் கடைசிவரை ஆட்டமில்லாமல் 79 பந்துகளில் 13 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 147 ரன்கள் குவித்தார். டி20 விளையாட்டில் தனிப்பட்ட ஒரு  வீரரின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஸ்டோய்னிஸின் இந்த அதிரடி ஆட்டத்தால் மெல்போர்ன் அணி 20 ஓவர்கள் முடிவில் 219 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து 220 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சிட்னி சிக்ஸர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் போட்டிகளில் இந்தமுறை ஸ்டோய்னிஸ் டெல்லி அணிக்காக 4.8 கோடி கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இதுபோல அதிரடி ஆட்டத்தை டெல்லி அணியிலும் ஸ்டோய்னிஸ் தொடரும் பட்சத்தில், அந்த அணி கப்பை வெல்ல வாய்ப்புகள் அதிகம் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்