"இந்த ஆட்டத்த பாக்கவே எனக்கு '35' வருஷம் ஆயிடுச்சு... 'சீனியர்' வீரர்களை மறைமுகமாக சீண்டிய 'மனோஜ் திவாரி'??... சர்ச்சையை கிளப்பிய 'ட்வீட்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக, ரிஹானா உள்ளிட்ட வெளிநாட்டு பிரபலங்கள் பலர் ட்வீட் செய்திருந்தனர்.
இதனையடுத்து, இந்தியாவில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் உலகளவில் கவனம் பெற்றது. இந்நிலையில், சச்சின், கோலி, ரோஹித் உள்ளிட்ட சில கிரிக்கெட் பிரபலங்கள், இந்தியாவின் பிரச்சனைகளை இந்தியாவே பார்த்துக் கொள்ளும் என்றும், வெளியிலிருந்து பார்ப்பவர்கள் கருத்துக்களை சொல்லாமல் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற ரீதியிலான கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
வெளிநாட்டு பிரபலங்கள் இந்திய விவசாயி போராட்டத்திற்கு குரல் கொடுத்ததை எதிர்க்கும் வகையில் இவர்கள் கருத்து பகிர்ந்திருந்த நிலையில், இந்த சம்பவம் கடும் பரபரப்பையும், விவாதத்தையும் கிளப்பியது. இதனிடையே, இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி செய்துள்ள ட்வீட் ஒன்று தற்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனோஜ் திவாரி தனது டீவீட்டில், 'நான் சிறுவனாக இருந்த போது பொம்மலாட்டம் பார்த்ததில்லை. ஆனால், அப்படிப்பட்ட ஒரு பொம்மலாட்டத்தை பார்க்க எனக்கு 35 ஆண்டுகளாகி விட்டது' என குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றையும் அதனுடன் இணைத்துள்ளார். அரசுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்த மற்ற கிரிக்கெட் வீரர்களை அரசுக்கு இணங்க ஆடுவதைத் தான் மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் மனோஜ் திவாரி, இந்த டீவீட்டை செய்ததாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
சீனியர் வீரர்கள் நிலைப்பாட்டை ஆதரிக்காமல், தனது மனதில் பட்டதை துணிவுடன் சொன்ன மனோஜ் திவாரிக்கு ஆதரவான கருத்துக்களையும் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்