"'திறமை' மட்டும் இருந்தா போதாது... இதையும் மனசுல வெச்சு ஆள எடுங்க.." 'இந்திய' வீரரின் ட்வீட்டால் 'பரபரப்பு'.. "2 'மேட்ச்' முடியுறதுக்குள்ள 'Start' பண்ணிட்டாங்களே!!"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பெங்களூர் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற போட்டியில், கோலி தலைமையிலான பெங்களூர் அணி, 6 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றிருந்தது.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, 149 ரன்கள் மட்டுமே அடித்திருந்த போதும், பந்து வீச்சில் அந்த அணி மிக சிறப்பாக செயல்பட்டது. ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் 54 ரன்கள் அடித்து அவுட்டான நிலையில், மூன்றாவது வீரராக களமிறங்கிய மனிஷ் பாண்டே (Manish Pandey), 39 பந்துகளில் 38 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதன் காரணமாக, இறுதியில் இலக்கை எட்ட ஹைதராபாத் அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு, தோல்வியடைந்திருந்தது.

முன்னதாக, கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் போட்டியிலும், ஹைதராபாத் அணி தோல்வியடைந்திருந்தது. இந்த போட்டியில், கடைசி வரை களத்தில் நின்ற மனிஷ் பாண்டே, 61 ரன்கள் அடித்திருந்தாலும், சில பவுண்டரிகளை அடிக்க முயற்சிக்காமல், பந்துகளை வீணடித்தார். மற்றொரு மிடில் ஆர்டர் வீரரான விஜய் சங்கரும், இரண்டு போட்டிகளிலும் பெரிய அளவில் சோபிக்கவில்லை.

இதனால், ஹைதராபாத் அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையை பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் குறை கூறி வருகின்றனர். இனி வரும் போட்டிகளில், மனிஷ் பாண்டே மற்றும் விஜய் ஷங்கர் ஆகியோருக்கு பதிலாக, வேறு வீரர்களை ஹைதராபாத் அணி களமிறக்கினால் தான் வெற்றி காண முடியும் எனவும் குறிப்பிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரரான மனோஜ் திவாரி (Manoj Tiwary), ஹைதராபாத் அணியின் பேட்டிங்கை விமர்சனம் செய்து ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில், ஒரு அணி வீரர்களை தேர்ந்தெடுக்கும் போது, அவர்களின் திறமையை மட்டும் வைத்து தேர்வு செய்யாமல், அவர்களின் மனநிலையையும் கருத்தில் கொண்டு எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் அந்த அணி இரண்டாவது சிறந்த அணியாக தான் இருக்க முடியும் என்றும் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

 

மனிஷ் பாண்டே மற்றும் சன் ரைசர்ஸ் அணியின் இதர மிடில் ஆர்டர் பேட்டிங்கை குறிப்பிட்டு தான், மனோஜ் திவாரி அப்படி ட்வீட் செய்துள்ள நிலையில், மற்றொரு கிரிக்கெட் வீரரே, ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன்களை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளது, சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்