ராகுலை வைத்து இந்திய அணி பெருசா போட்ட பிளான்??.. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே கிரிக்கெட் பிரபலம்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணி வீரர் கே எல் ராகுல் குறித்து, முன்னாள் இந்திய வீரர் தெரிவித்த கருத்து, கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்திய அணிக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி 20 போட்டிகளில் ஆடவுள்ளது.
இதன் முதல் ஒரு நாள் போட்டி, பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த இரண்டு தொடர்களுக்குமான இந்திய அணி, சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
மீண்டு வந்த ரோஹித் ஷர்மா
தென்னாப்பிரிக்க தொடரில் காயம் காரணமாக விலகியிருந்த ரோஹித் ஷர்மா, தற்போது அதிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில், இந்திய அணிக்கு தலைமை தாங்கவுள்ளார். அதே போல, அதிக இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள நிலையில், ரவி பிஷ்னோய் முதல் முறையாக இந்திய அணிக்காக ஆட தேர்வாகியுள்ளார்.
கடும் விமர்சனம்
இதற்கு முன்பாக, தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர் என இரண்டையும் இழந்தது. அதிலும் குறிப்பாக, ஒரு நாள் தொடரில், ஒரு போட்டியைக் கூட வெல்லாத இந்திய அணி, வொயிட் வாஷ் செய்யப்பட்டிருந்தது. பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் இந்திய கிரிக்கெட் அணி, ஒரு போட்டியில் கூட நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை, ராகுலின் கேப்டன்சி உள்ளிட்ட பலவும் கடுமையான விமர்சனங்களை சந்தித்திருந்தது.
முன்னாள் வீரர்கள் கேள்வி
ரோஹித் ஷர்மா இல்லாத காரணத்தினால், இந்திய அணியை கே எல் ராகுல் வழி நடத்தியிருந்தார். அணி தேர்வு, பந்து வீச்சு ரொட்டேஷன் என அவர் மேற்கொண்ட பல செயல்கள் பற்றி, அதிக விமர்சனங்கள் தான் எழுந்தது. அதிக அனுபவம் இல்லாத ராகுலை ஏன் கேப்டனாக அறிவித்தீர்கள் என்றெல்லாம் பல முன்னாள் வீரர்கள் கேள்வி எழுப்பினர்.
"23 வருசமா வேற நாட்டுல இருந்தா.." மகளைக் கண்டதும் ஆனந்த கண்ணீர்.. மனதை உருக வைக்கும் பின்னணி
ராகுலின் கேப்டன்சி
அதே வேளையில், இன்னொரு பக்கம் ராகுல் தன்னை ஒரு சிறந்த கேப்டனாக விரைவில் மெருகேற்றிக் கொள்வார் என்றும் அவருக்கு ஆதரவாக சிலர் கருத்து தெரிவித்தனர். அது மட்டுமில்லாமல், அடுத்த காலத்தில் ஒரு கேப்டனை உருவாக்க இந்திய அணி ராகுலுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி, ராகுல் கேப்டன்சி குறித்து சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.
என்ன தகுதி இருக்கு?
'ராகுலிடம் ஒரு கேப்டனுக்கான என்ன தகுதி இருப்பதை பார்த்தீர்கள்?. அவரை வருங்கால கேப்டனாக்க மெருகேற்றும் வேலைகளை செய்கிறோம் என்று திடீரென கூறுகிறார்கள். ஒரு கேப்டனை நாம் எப்படி வளர்க்க முடியும்?. கேப்டன்சி என்பது இயற்கையாகவே வர வேண்டும். அது ஒருவருக்குள் கட்டமைக்கப்பட்ட விஷயமாகும். நீங்கள் சொல்வது போல, ஒரு கேப்டனை வளர்த்தலாம். ஆனால், அந்த செயல் முறை நீண்ட காலம் எடுக்கும்.
தங்கம் விலை.. ஒரே நாளில் கண்ட சரிவு.. நகை வாங்க போறவங்களுக்கு செம லக் தான் போங்க
தவறான முடிவுகள்
அப்படி உருவாக்கும் கேப்டன், சிறந்த முடிவுகளை எடுக்க, 20 - 25 வரை போட்டிகள் வரை ஆகலாம். ஆனால், அதில் வெற்றி காண முடியும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. ஒவ்வொரு போட்டியும் இந்திய அணிக்கு முக்கியமானதாகும். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இழந்ததற்கான முக்கிய காரணம், சில தவறான முடிவுகள் எடுக்கப்பட்டது தான்.
ஏமாற்றம்
நான் ராகுலின் கேப்டன் பதவி மீது பழி சுமத்தவில்லை. ஆனால், ஒரு வீரருக்குள் இருக்கும் தலைமை திறனை அறிந்து கொள்ளாமல், ஒரு வீரரை கேப்டனாக சீர்படுத்தும் முயற்சியில் இறங்கிய தேர்வாளர்கள் முடிவால் நான் ஏமாற்றம் அடைந்தேன்' என மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கேப்டன் ரோஹித் ஷர்மா.. இப்டி ஒரு சிக்கல்'ல மாட்டிகிட்டாரே??.. சுத்தி ரிஸ்க்.. எப்படி தான் சமாளிக்க போறாரோ?
- ச்ச.. இந்த மனுசனுக்காகவாது மேட்ச் ஜெயிச்சிருக்கலாம்.. கடைசி ஓவரில் சஹால் பண்ண ‘பெரிய’ தப்பு.. விட்டு விளாசும் நெட்டிசன்கள்..!
- என்னது இந்தியா டீமுக்குள்ள ‘ரெண்டு’ கேங்கா பிரிஞ்சு இருக்காங்களா..? கொழுத்திப் போட்ட பாகிஸ்தான் வீரர்..!
- வெளியானது இந்த வருட T20 உலககோப்பை போட்டி அட்டவணை.. இந்தியாக்கு வாய்ப்பிருக்கா? யார் யார் கூட மேட்ச் இருக்கு? முழு தகவல்
- கேப்டன் பதவி.. விலகிய கோலி.. ரோஹித், ராகுல் எல்லாம் அதுக்கு தான் வெயிட்டிங் போல.. பரபரப்பை ஏற்படுத்திய முன்னாள் வீரர்
- அம்பயரை கதற விட்ட இந்திய அணி.. "உங்களால எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துரும் யா.." பரபரப்பான மைதானம்
- இதென்னப்பா புது ட்விஸ்டா இருக்கு.. கோலி-ரோஹித் இடையே இப்படி ஒரு பிரச்சினை இருந்துச்சா?
- இந்திய அணியை அறிவிப்பதில் குழப்பம்.. ரோஹித் ஷர்மா தான் காரணமா?.. வெளியான லேட்டஸ்ட் தகவல்
- இந்திய அணியை சீண்டிய வாகன்.. பங்கமாக வச்சு செஞ்ச வாசிம்.. உங்களுக்கு இது தேவையா பாஸ்
- அஸ்வின் பேச்சால் ரவிசாஸ்திரி கொதிப்பு..."பூசி மெழுகி பேசுற ஆள் நான் இல்லை"..!