சூப்பரா 'ஆடினாலும்' பரவால்ல... 'மோசடி' செய்த இளம்வீரருக்கு... 1 ஆண்டுகள் தடை!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

அண்டர் 19 போட்டியில் இந்தியா சார்பாக விளையாடிய இளம்வீரர்கள் பலரும் வயது மோசடி செய்து விளையாடிய விவகாரம் கிரிக்கெட் உலகில், மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் டெல்லி அணி வயது மோசடி செய்து விளையாடிய இளம்வீரர் மீது நடவடிக்கை எடுத்து இருக்கிறது.

இதில் மஞ்ஜோத் கல்ரா என்னும் இளம்வீரரருக்கு ரஞ்சி போட்டிகளில் விளையாட 1ஆண்டுகள் தடைவிதித்து டெல்லி அணி உத்தரவு பிறப்பித்துள்ளது. 2018-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொண்டு விளையாடிய மஞ்ஜோத் அந்த தொடரின் இறுதிப்போட்டியில் சதம் அடித்து அசத்தினார்.

இதையடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணியாலும் அவர் ஏலத்தில் எடுக்கப்பட்டார். தொடர்ந்து டெல்லி ரஞ்சி டிராபி அணியிலும் இடம்பெற்றார். இந்தநிலையில் அவர் வயது மோசடி செய்து அண்டர் 19 போட்டியில் விளையாடியதாக புகார் எழுந்தது. இதையடுத்து விசாரணை நடத்தி அவருக்கு 1 ஆண்டுகள் டெல்லி அணி தடை விதித்துள்ளது. இதனால் அடுத்த 1 ஆண்டுக்கு அவரால் எந்தவொரு போட்டியிலும் ஆட முடியாது.

இதேபோல கொல்கத்தா அணி வீரர்கள் சிவம் மாவி, நிதிஷ் ராணா ஆகியோர் மீதும் வயது மோசடி புகார் எழுந்துள்ளது. அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டால், ஐபிஎல் தொடரில் அவர்களால் கொல்கத்தா சார்பாக களமிறங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்